பதவி உயர்வில் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 6, 2021

பதவி உயர்வில் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும்

தமிழ்¢நாடு முதலமைச்சரிடம் பொறியாளர்கள் சங்கம் மனு

சென்னை, ஜூலை 6-  உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பினை அமல் படுத்த வேண்டிய நிலை உள்ள தால் பதவி உயர்வில் இட ஒதுக் கீடு சட்ட மசோதாவை நிறை வேற்ற வேண்டும் என்று முதல் வர் மு..ஸ்டாலினிடம் பொறி யாளர்கள் சங்கம் மனு அளித்தது.

அம்பேத்கர் பொறியாளர்கள் சங்க தலைவர் செல்வின் சவுந் தர்ராஜன், பொதுச்செயலாளர் அசோகன் ஆகியோர் முதல்வர் மு..ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

அரசு பொறியாளர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு இன சுழற்சி முறையில் (ரோஸ் டர் சிஸ்டம்) வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிராக சிலர் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த 2020 மார்ச் 6ஆம் தேதி உச்சநீதிமன்றம் பதவி உயர் வில் இன சுழற்சி முறையில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தேர் வாணைய தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பதவி உயர் வினை வழங்கிட தீர்ப்பு வழங்கி யது. எனவே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை அமல்படுத்த வேண் டிய நிலை உள்ளது. இந்நிலை நீடித்தால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட மற்றும் பழங்குடியின பொறியாளர்கள் அரசு பதவி களை அடைவது கானல் நீராகி விடும். முந்தைய அரசு சட்ட மன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றாத காரணத்தினால் மட்டுமே உச்சநீதிமன்றம் சமூக நீதிக்கு எதிராக இந்த தீர்ப்பினை வழங்கிட நேர்ந்தது. முதல்வர் மு..ஸ்டாலின் தலைமையி லான திமுக ஆட்சியில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

கலைஞர் அரசின் 6ஆவது ஊதியக்குழுவின் ஒரு நபர் குழு மூலமாக கடந்த 2010இல் அரசு பொறியாளர்களின் தகுதியை உயர்த்தும் வகையில் ஊதிய விகிதத்தினை வழங்கினர். உதவி பொறியாளர் 15600--39100+ஜிபி 5400, உதவி செயற்பொறியாளர் 15600--39100+ஜிபி6600, செயற் பொறியாளர் 15600--39100+ஜிபி 7600. ஆனால், கடந்த 2011 அதி முக ஆட்சியில் ஊதிய விகிதத் தினை குறைத்து ஆணையிட் டது. உதவி பொறியாளர்9300-34800+ஜிபி5100, உதவி செயற் பொறியாளர் 15600--39100+ ஜிபி 5400, செயற்பொறியாளர் 15600--39100+ஜிபி6600. இந்த அரசா ணையினை எதிர்த்து அனைத்து துறைகளை சார்ந்த பொறியாளர் சங்கங்கள் உயர்நீதிமன்றம் மற் றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். உச்சநீதிமன்றம் ஊதிய முரண்பாடுகளை களைய ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஊதியகுறை தீர்க் கும் குழு அமைத்து தீர்வு கண் டிட ஆணையிட்டது.

ஆனால், முந்தைய அரசு தனது அதிகாரத்தை பயன் படுத்தி இக்குழுவையும், குறைந்த ஊதிய விகிதத்தையே பரிந்து ரைக்க செய்து பொறியாளர் களுக்கு அநீதி இழைத்து விட் டது. ஆகையால் கலைஞர் ஆட் சியில் பொறியாளர்களுக்கு வழங் கப்பட்ட 6ஆவது ஊதியக் குழு வின் ஒரு நபர் குழுவால் வழங்கப் பட்ட ஊதிய விகித்தினை அதற் கேற்ப 7ஆவது ஊதிய விகிதத்திற்கு மாற்றிய மைத்து பொறியாளர் களுக்கு வழங்க வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment