தமிழ்நாடு எல்லையில் ஜிகா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 12, 2021

தமிழ்நாடு எல்லையில் ஜிகா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை

நாகர்கோவில், ஜூலை 12 கேரளாவில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்ட பெண் குமரியை சேர்ந்தவர் என்ற தகவல் வெளி யாகி உள்ளது. இதனால் குமரி எல்லையில் ஜிகா வைரஸ் பரவு வதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட எல்லையை யொட்டி அமைந்துள்ள கேரள மாநிலம் பாறசாலை பகுதியைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணி ஒரு வருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

அந்த பெண்ணுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருடைய சொந்த ஊர் குமரி மாவட்டம் பளுகல் பகுதியாகும். கணவர் வீடு பாறசாலையில் உள்ளது. பிரசவத் திற்கு முன்பு அவர் பளுகல் பகுதி யில் தங்கி இருந்ததாகவும் தெரிகிறது.

இதற்கிடையே மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய லாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் உத்தரவுப்படி  10.7.2021 அன்று குமரி மாவட்ட ஆட் சியர் அரவிந்த், சுகாதாரத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் ஆகியோருடன் தமிழ்நாடு எல்லையான பளுகல் பகுதியில் ஜிகா வைரஸ் குறித்த முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் இதுவரை ஜிகா வைரஸ் தொடர்பான காய்ச்சல் பாதிப்பு யாருக்கும் இல்லை. அத்தகைய அறிகுறி களுடன் யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அவர் களது ரத்த மாதிரிகள் பரிசோ தனைக்கு அனுப்பி வைக்கப்படும். குமரி- _ கேரள எல்லைப்பகுதியில் கரோனா பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றார்.

No comments:

Post a Comment