அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துகிறது; ஈரானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 20, 2021

அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துகிறது; ஈரானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்

ஈரான், ஜூலை 20- ஈரானு டனான அணுசக்தி ஒப் பந்தத்தில் இருந்து அமெ ரிக்கா கடந்த 2018ஆம் ஆண்டு வெளியேறியது முதல் இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த ஒப்பந்தத்தை தக்க வைப்பது தொடர் பாக, ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்ட அமெரிக்கா அல் லாத மற்ற 5 நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை தொடங் கியது.

அதேபோல் அமெ ரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மறைமுக அணுசக்தி பேச்சுவார்த் தையின் முன்னோட்ட மாக கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக இரு நாடு களிடையே பேச்சு வார்த்தை தொடங்கியது. இந்த சூழலில் ஈரான் அதி பர் தேர்தலையொட்டி கடந்த மாதம் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை மற்றும் கைதிகள் பரி மாற்ற பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப் பட்டன. இந்த நிலையில் ஈரானின் புதிய அதிபர் இப்ராகிம் ரைசி ஆகஸ்டு மாதம் பதவியேற்ற பின் னரே, நிறுத்திவைக்கப் பட்ட பேச்சுவார்த்தை கள் மீண்டும் தொடங்கும் என ஈரான் அண்மையில் அறிவித்தது. ஈரானின் இந்த அறிவிப்புக்கு அமெ ரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெ ரிக்க வெளியுறவு அமைச் சகத்தின் செய்தி தொடர் பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், ‘‘ஈரானின் இந்த அறிவிப்பு, அணு சக்தி ஒப்பந்தத்தின் நிபந் தனைகளுக்கு மீண்டும் திரும்புவதற்கான முட்டுக்கட்டைக்கான காரணத்தை திசை திருப் பும் ஒரு மூர்க்கத்தனமான முயற்சி. இதன் மூலம் அணுசக்தி ஒப்பந்த பேச்சு வார்த்தையை ஈரான் வேண்டுமென்றே தாமதப் படுத்துகிறது. ஈரான் ஒரு மனிதாபிமான சைகை செய்வதில் உண்மையி லேயே அக்கறை கொண் டிருந்தால், அந்த நாடு அமெரிக்க கைதிகளை உடனடியாக விடுவிக் கும்’’ என கூறினார்.

No comments:

Post a Comment