இந்தோனேசியாவில் 2 வாரத்தில் கரோனாவுக்கு 114 மருத்துவர்கள் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 20, 2021

இந்தோனேசியாவில் 2 வாரத்தில் கரோனாவுக்கு 114 மருத்துவர்கள் பலி

ஜகார்தா, ஜூலை 20- இந்தோ னேசியா நாட்டில் கரோனா பரவல் மிகவும் அதிகரித்து உள்ளது. அங்கு டெல்டா வகை வைரஸ் தாக்கியதை தொடர்ந்து அது பல்வேறு இடங்களுக்கும் பரவி வரு கிறது.

இதன் மூலம் ஆசியாவில் கரோனாவின் மய்யப்பகுதி யாக இந்தோனேசியா மாறி இருக்கிறது. இந்தோனேசியா வில் கிராமப்பகுதிகளே அதிக மாக உள்ளது. அங்கு போது மான மருத்துவமனை மற்றும் மருத்துவ வசதிகள் இல்லை.

இதனால் நோயில் சிக்கிய வர்கள் சிகிச்சை கிடைக்காம லேயே செத்து மடியும் அவ லம் ஏற்பட்டுள்ளது.

நேற்று (19.7.2021) மட்டும் 44 ஆயிரத்து 721 பேரை கரோனா தாக்கி உள்ளது. 1,093 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்து வர்கள், செவிலியர்கள் இல்லை. அதே நேரத்தில் அவர்களும் கரோனாவில் சிக்கி பலியா கிறார்கள். கடந்த 2 வாரத்தில் மட்டுமே 114 மருத்துவர்கள் உயி ரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் இதுவரை 545 மருத்துவர்கள் கரோனாவுக்கு உயிரிழந்துள் ளனர். அவர்களில் 20 சத வீதம் பேர் கடந்த 2 வாரத்தில் பலியாகி இருப்பது குறிப்பிடத் தக்கது.

அமெரிக்காவில் மாடர்னா தடுப்பூசி போடப் படுகிறது. இதன் பூஸ்டர் ஊசியாக சீனாவில் சினோ வேக் ஊசியை போடுகிறார் கள். 95 சதவீத சுகாதார ஊழி யர்களுக்கு தடுப்பூசி போடப் பட்டுள்ளது.

ஆனால் அவர்களிலும் சிலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment