டில்லி - காத்மாண்டு வாரந்தோறும் விமானங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 21, 2021

டில்லி - காத்மாண்டு வாரந்தோறும் விமானங்கள்

காத்மாண்டு, ஜூலை 21- டில்லி - காத்மாண்டு இடையே வாரந்தோறும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை, இரண்டில் இருந்து ஆறாக உயர்த்தப்பட்டு உள்ளது.

நம் அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத் மாண்டுவிலிருந்து, டில்லிக்கு இயக்கப்பட்ட விமானங்கள் கரோனா காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டன.இரு நாடுகளின் ஒப்பந்த அடிப்படையில், காத்மாண்டு - டில்லி மார்க்கத்தில் வாரந்தோறும் இரு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விமானங்களின் எண்ணிக்கை வாரந்தோறும் ஆறாக 19.7.2021 முதல் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் விண்வெளி பயணம்

டெக்சாஸ், ஜூலை 21- அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் குழுவினர் நியூ ஷெப்பர்ட் விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றனர். இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் சமீபத்தில், யூனிட்டி 22 என்ற விண்கலத்தை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்தது.

இதனை தொடர்ந்து தற்போது அமேசான் நிறுவனரும் ப்ளூ ஆர்ஜின் நிறுவன நிறுவனருமான ஜெப் பெசோஸ் தனது குழுவினருடன் விண்வெளிக்கு பயணித்தார்.

ஜெப் பெசோஸ் உடன் அவரது சகோதரர் மார்க் பெசோஸ், முதல் பெண் விமான பயிற்சியாளரான 82 வயது மூதாட்டி வேலி பங்க், 18 வயது இளைஞர் அலீவர் டேன் ஆகியோர் சென்றனர். இந்த விண்வெளி பயணத்தின் மொத்த நேரம் 10 நிமிடங்கள். நியூ ஷெப்பட் விண்கலம் மூலம் 100 கி.மீ. உயரத்தில் உள்ள புவியின் வளிமண்டல எல்லைக்கோடான கார்மன் கோட்டை தாண்டி 6 கி.மீ. தூரம் குழு பயணித்து அங்கிருந்து பூமி மற்றும் அடர் கருப்பான விண்வெளியை ரசித்த பின்னர் பூமிக்கு திரும் பினர்.

No comments:

Post a Comment