மெட்ராஸ் அய்.அய்.டி.க்கு சென்னை அய்.அய்.டி என பெயர் மாற்றும் திட்டம் இல்லையாம்: ஒன்றிய அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 27, 2021

மெட்ராஸ் அய்.அய்.டி.க்கு சென்னை அய்.அய்.டி என பெயர் மாற்றும் திட்டம் இல்லையாம்: ஒன்றிய அரசு

புதுடில்லி, ஜூலை 27 மெட்ராஸ் அய்.அய்.டி.க்கு, சென்னை அய்.அய்.டி. என பெயர் மாற்றும் திட்டம் இல்ல என ஒன்றிய அரசு உறுதிபட தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டின் தலைநக ரான மெட்ராஸ் நகருக்கு சென் னை என கடந்த 1996ஆம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனாலும் சில அரசு நிறுவனங்கள் இன்னும் மெட்ராஸ் என்ற பெயரிலேயே இயங்கி வருகின்றன.இதில் சென் னையில் உள்ள ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவன மான அய்.அய்.டி.யும் ஒன்று. மெட்ராஸ் அய்.அய்.டி. என இருக்கும் இந்த நிறுவனத்தின் பெயரை, சென்னை அய்.அய்.டி. என மாற்றம் செய்ய வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கைகள் உள்ளன.

ஆனால் சென்னை அய்.அய்.டி. என பெயர் மாற்றும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என மத்திய அரசு உறுதிபட தெரிவித்து உள்ளது. இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்  நாடாளுமன்ற மக்களவையில் எழுத்து மூலம் பதிலளித்து இருந்தார்.அதில் அவர் கூறுகையில், இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ்-க்கு (அய்.அய்.டி. மெட்ராஸ்) பெயர் மாற்றம் செய்யும் எந்த பரிந்துரையும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment