இந்து அறநிலையத்துறையா? தமிழ்நாடு அறநிலையத்துறையா? - ஒரு வரலாற்று பார்வை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 3, 2021

இந்து அறநிலையத்துறையா? தமிழ்நாடு அறநிலையத்துறையா? - ஒரு வரலாற்று பார்வை

பார்ப்பனர் ஆதிக்கத்தில்

இந்து ஆலயங்கள் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருந்துவந்தன. பல்லாண்டு களாகப் பார்ப்பனரல்லாதவர்கள் குறிப்பாக பட்டியலினத்தவர், சாணார்கள் ஆகியோர் ஆலயங்களுக்குள்ளேயே செல்ல முடியாது.

ஈசனின் அன்பிற்குரியவரான நந்தனார் - அவர்பொருட்டு, இறைவனே அவர் உழ வேண்டிய எத்தனையோ வேலி நிலத்தை உழுதார் என்றெல்லாம் கூறப்படும் அள விற்கு மெய்யடியார்.

அப்படிப்பட்டவர் கூட ஆலயம் உட் சென்று தொழ முடியவில்லை. திருப்புன் கூரில் வாயிலேயே தான் நின்று கைக்கூப்பி தொழுதார் என்றும், அவ்வூரில் கருவ றையை மறைத்து எதிரே வழக்கமாக இருக் கும் நந்தி, விலகி இருக்கும், அது ஏனென் றால்வாசல் மறைக்குதுஐயே என்று நந் தனார் பாட, நந்தியைப் பார்த்துச் சிவனார் சற்றே விலகியிரும் பிள்ளாய்! என்று சொல்ல, நந்தி ஈசனை மறைக்காது விலகி யிருக்கிறது என்று புராணக்கதைக் கதை கூறுவார்கள்.

பாவம் சிவபெருமானே கூட அந்நாளில் அந்தணர் திருக்கூட்டத்தை மீறி, நந்தனைஉள்ளே வாஎன்று உள்ளே அழைத்து வழிபட இசைவு அளிக்கவில்லை. நந்தன் வழிபாடெல்லாம் வாயிலோடு சரி. மேலும் இந்தக் கதையெல்லாம் இரசிக்கத் தண்ட பாணி தேசிகர் நடித்த நந்தனார் திரைப் படத்தில்அய்யே மெத்தக் கடினம், ‘மாடு தின்னும் புலையா உனக்கு ஆலயம் ஒரு கேடாஎன்று தூற்றும் காட்சியெல்லாம் கண்டு ரசியுங்கள்.

அரசர்கள்

இப்படியெல்லாம் இருந்த காலத்தில் கோயிலையே கட்டிவைத்த அரசர்கள், மூடர்கள் அவற்றை ஆரியப் பார்ப்பனர் களிடம் ஒப்படைத்துக் கைகட்டி, வாய்ப் பொத்திக் கருவறைக்குள் அவர்களை விட்டு வெளியே இருந்தனர். மன்னராட்சிக் குப்பின், கறையான் புற்று எடுக்கக் கருநாகம் புகுந்தது போல், ஆலய நிருவாகம் முழு வதுமே அவாளிடத்தில் என்று ஆகிடஆகமம், ‘தாந்திரீகம்அய்யா மொழியில்வெங்காயம்என்று ஆலயச் சொத்துக் களைக் கபளீகரம் செய்தனர். தமிழகத்தில் 43 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. ஏதோ 35 அல்லது 40 கோயில்களில் தான் ஆறு கால பூஜை, அய்ந்து கால பூஜை, ஆகியன நடக்கின்றன. பெரும்பாலான கோவில்களில் ஒருவேளை வழிபாட்டிற்கே ததிங்கிணந்தத் தந்தத்திரிகிடதோம்.

கோவில் குளறுபடி

ஒரு காலத்தில் திருப்பரங்குன்றம் தெய் வானை உடனுறை முருகப்பெருமான் கோயிலைக் கூட மதுரை மீனாட்சி சமேத சுந்தரேசுவரர் கோவில் நிருவாகத்தின் கீழே இருந்தது. அதைப்போல் சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவரங்கம் அரங்க நாதர் கோவிலின் கீழே இருந்தது. இவற்றை யெல்லாம் கூறுவதன் காரணம் ஆரிய ஆதிக்கத்தின் கீழ் கோவில்கள் இருந்த போது கோடிக்கணக்கான சொத்துக்கள் கோயில் பிணாக்கள் - இந்துக்கள் இன் றைக்கு பி.ஜே.பி.யின் செல்வாக்கு மிகுந்த நபர்கள் என்போர் முதல் ஜக்கி வாசுதேவ் வரை, “இந்துக் கோவில்கள் அரசின் வசம் இருக்கக்கூடாது. திருச்சபைகள் கிறித்தவர் களிடமே இருப்பதுபோல், மசூதிகள் இஸ் லாமியரின் நிருவாகத்தில் இருப்பதுபோல் இந்துக் கோயில்களைத் தனிப்பட்டவர்கள் இடம் ஒப்படைத்துவிட்டு அரசு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்என்று குரல் எழுப்பு கின்றனர்.

நியாயமா? இல்லை

வரலாறு தெரியாமல் மேலெழுந்த வாரியாக பார்ப்பவர்களுக்கு இது நியாயம் போலத் தெரியும். ஆனால் அரசின் கட்டுப் பாட்டில் இராமல் கோயில்கள் தனிப்பட்ட வர்களின் பொறுப்பில் விடப்பட்டால் நடை பெற்றுவரும் கொள்ளையை எண்ணினால் எவ்வளவு விபரீத யோசனை என்பது புரியும்.

கோயில் சொத்தைத் திருடி தின்பவன் அடுத்த பிறவியில் கோயில் பெருச்சாளியாக பிறப்பான் - சிவன் சொத்து குலநாசம் என்ற பயமுறுத்தல்கள் எல்லாம் வீண் அச்சுறுத் தல்கள்.

ஆலயத்தில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கையிலேயே கொள்ளை போன சொத்துக்கள் இப்போது வெளிச்சத்துக்கு வருகின்றன என்பதற்கு வடபழனி கோயி லுக்கு சொந்தமான ரூபாய் 250 கோடி மதிப்புள்ள அய்ந்தரை ஏக்கர் நில மீட்பு. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

பத்திரிகையாளர் சந்திப்பில் அறநிலை யத்துறை அமைச்சர் மாண்பமை சேகர்பாபு எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்ட கேள் விகளில் ஒன்று சிவகங்கை கவுரி விநாயகர் கோவில் ஆக்கிரமிப்பைப் புகார்கள் வந்தும் ஏன் கவனிக்கவில்லை என்பது.

இன்னும் சொல்லப்போனால் ஆலயங் களுக்குச் சொந்தமான வீடுகள், கடைகள் ஆகியவற்றை வாடகைக்கு எடுத்து வாடகை நிலுவையாக உள்ள தொகைகள் பலகோடி, இவர்களெல்லாம் பிற மதத்த வர்கள் இல்லை. எல்லோரும் ராமசாமி, குப்புசாமி, தேவராஜன், சீனிவாசன் என்று இந்து என்போர் தாம்.

வம்பு பேசும் வைணவர்

திருவரங்கத்து ரங்கராஜன் நரசிம்மன் எனும் வைணவப் பார்ப்பனர் கோவில் நிர்வாகம் ஒரு போதும் பார்ப்பனர்கள் கையில் இருந்ததில்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். அதுவும் அவருக்கு நன்கு தெரிந்த, அவர் போராடிக் கொண்டிருக்கும் திருவரங்கம் திருக்கோயிலின் அறங்காவலர் வேணு சீனிவாசன் என்ன, அவர்கள் மொழியில் சொல்லும் சூத்திரனா? இல்லையே.

அது மட்டுமில்லை திருவரங்கம் திருக்கோயிலை நிருவகியுங்கள் என்றால் அத்திருக்கோயில் அர்ச்சகப் பார்ப்பனர்கள்அய்யய்யோ நிர்வாகமா? வேண்டவே வேண்டாம்என்று கூறி விடுவார்களாம்.

இன்றைக்குத் தான் அரசின் தலை யீட்டினால் பிற்படுத்தப்பட்டவர்களும், ஒடுக்கப்பட்டவர்களும், பெண்களும் கூட அறங்காவலர்களாக கோவிலை நிர்வகிப்ப வர்களாகி உள்ளனர். இந்து அறநிலையச் சட்டம் வரும்முன் பார்ப்பனர்களின் ஆதிக் கத்தில் தான் முழுக்க முழுக்க இருந்தன.

நீதிக்கட்சி

அவர்கள் கோயில் சொத்துக்களைக் கோயில் தேவதாசிகளை நுகர்ந்து வந்தார் கள். நீதிக்கட்சியின் ஆட்சியினால் இந்து அறநிலையத்துறை உருவாயிற்று. தேவதாசி ஒழிப்பு வந்தது. டாக்டர் கலைஞர், அதனாலேதான் பராசக்தியிலே ஒரு வசனம் வைத்திருப்பார். “கோயில் கூடாது என்பதல்ல அது கொடியவர்களின் கூடார மாக ஆகிவிடக்கூடாது. பக்தி பகல் வேஷம் ஆகிவிடக்கூடாது. 1920 முதல் 1937 வரையிலான இடையில் மூன்றாண்டுக் காலம் - டாக்டர் சுப்பராயனின் மூன்றாண் டுக்கால - ஆட்சி தவிர்த்து நீதிக்கட்சியின் 13 ஆண்டு கால ஆட்சியில் குறிப்பிடத்தக்க பல சாதனை நிகழ்வுகள் பெண்களுக்கு வாக்குரிமை, வகுப்புரிமை, மருத்துவக் கல்வியில் சமஸ்கிருதம் நீக்கம் ஆகிய பல உள்ளன.

ஆனால் அவற்றுள் ஒன்றான இந்து அறநிலையத் துறையை நீதிக்கட்சித் தொடங்கி வைத்தது, இன்னும் அதாவது நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் பேசும் பொருளாக ஆகியிருக்கிறது.

வரலாறு பேசுகிறது

நீதிக்கட்சி ஆட்சியில் நிறைவேறிய இந்து அறநிலையத்துறை சட்ட வரலாறு காண்போம்.

1920இல், 1923இல் பனகல் அரசர் ராம ராய நிங்கர் முதலாவது அமைச்சராகவும், கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு இரண்டாம் அமைச்சராகவும், .பி.பாத்ரோ மூன்றா வது அமைச்சராகவும் (First Minister, Second Minister, Third Ministerஷீ) ஆகவும் விளங்கிய அமைச்சரவைக் காலத்திலும் பனகல் அரசர், கூர்மா வெங்கட ரெட்டி நாயுடு, சிவஞானம் பிள்ளை, முதலாவது, இரண்டாவது, மூன்றாவது அமைச்சர்களாக விளங்கிய அமைச்சரவைக் காலத்திலும் இந்து அறநிலையத்துறைச் சட்டம் குறித்த விவாதங்கள் சட்டமன்றத்திற்கு உள்ளே யும், வெளியேயும் நடைபெற்றன.

அப்போது முதலமைச்சர் பதவி கிடையாது. சட்டப்பேரவை கிடையாது. முதலாவது அமைச்சர் சட்டமன்றம்தான்  (Legislative Council).

1922லேயே

1922ஆம் ஆண்டே நீதிக்கட்சி அமைச்சரவை இந்த சட்டத்தைக் கொண்டு வந்து பலத்த எதிர்ப்புக் கிடையிலும் அது சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இன்று போல் அன்றும் ஆளுநர் கையொப்ப மிட்டாலே சட்டம் நிறைவேறும். அன்றைய தலைமை ஆளுநர் ரீடிங் வெளியிலிருந்து வந்த எதிர்ப்பினால் கையெழுத்து இட மறுத்துவிட்டார். எனவே இதே சட்ட முன்வரைவு இரண்டாவது அமைச்சரவைக் காலத்தில்தான் நிறைவேறிச் சட்டமாயிற்று. இங்கே ஓர் உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.போர்க்களத்திலே இறந்துபட்ட வீரர்களுக்கு எழுப்பிடும் நடுகல்லைத் தான் வழிப்பட்டு வந்தனர். இந்த பழைய மரபிலிருந்து சற்று விலகி பல்லவர் காலத்தின் பின் பெருந்தெய்வ வழிபாடு அதாவது கோயில் உருவாக்கி வழிபடும் பெருங்கோயில்களாயின.

பல்லவர் காலம் முதல்

நாம் இன்று காண்கிற கோயில்கள் அனைத்தும் பல்லவர் காலத்து தொடங்கி சோழர் காலத்தில் வளர்ந்து விஜயநகர  நாயக்கர் காலத்தில் எங்கும் பரவிய கோவில்கள் தமிழ்நாட்டில் 30 ஆயிரத்திற் கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. 1939ஆம் ஆண்டு அறநிலையத்துறை ஆணையராக இருந்த காமேஸ்வர ராவ் எத்தனை கோயில்கள் என புள்ளிவிவரம் அளித்துள்ளார். 1939ஆம் ஆண்டு ஜூலை ஒன்பதாம் தேதி இந்து, மெயில் ஆகிய ஏடுகளில் வந்துள்ளன.

1935 ஆம் ஆண்டு வரையில் 11625 பெருங்கோயில்களும், 11569 சிறு கோயில் களும் இருந்துள்ளன. இப்போது இந்த எண்ணிக்கை அதிகம். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருவேற்காடு கருமாரியம் மன் கோயில் எல்லாம் 1950களுக்கு பின் வந்தவை.

கோவில்களும் மசூதியும் ஒன்றா?

இந்தக் கோயில்களுக்கும், திருச்சபை களுக்கும், மசூதிகளுக்கும் அடிப்படை யில் வேறுபாடு உண்டு. இவை வழிபாட் டிற்கு தொடங்கியிருந்தாலும் நாளடை வில் கோயில்கள் சமூக அதிகார மய்யங் களாக விளங்கின. கோவில்களுக்கு எத்துணை முதன்மை இருந்தது என்பதை அறியப் பர்ட்டன் ஸ்டெயின் எழுதிய Temple the Centre of Activities என்னும் ஆங்கில நூலை படித்தாலே தெரியும். கோயில் வெறும் திருச்சபை, மசூதிபோல் வழிபாட் டுத் தலமல்ல. அது கருவூலம், கலைக்கூடம், நீதிமன்றம், வங்கி, கல்விக்கூடம், இசை, நட னச் சிறப்புடைய இடம் என பல்வகை யிலும் சிறப்புப் பெற்றிருந்தமையாலேயே பார்ப்ப னர்கள் கோவில் அதிகாரத்தை கைக்கொண்டனர்

(தொடரும்)

No comments:

Post a Comment