ஹரப்பா நகரமான தோலாவிரா உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு : யுனெஸ்கோ அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

ஹரப்பா நகரமான தோலாவிரா உலக பாரம்பரிய சின்னமாக தேர்வு : யுனெஸ்கோ அறிவிப்பு

புதுடில்லி,ஜூலை30- ஹரப்பா நகரமான தோலாவிராவை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது.

சீனாவின் புசோவ் நகரில் நடைபெற்று வரும் யுனெஸ்கோ உலக பாரம் பரியக் குழுவின் 44-ஆவது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள் ளது. இந்தக் கூட்டத்தின் போது தான் தெலங் கானா மாநிலத்தில் உள்ள காக்கதீய ருத்ரேஸ் வரா கோயிலை (ராமப்பா கோயில்) உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்தது.

தற்போது குஜராத் மாநிலம் கட்ச் பகுதியி லுள்ள மிகப் பழைமையான ஹரப்பா நகரமான தோலாவிராவையும் உலக பாரம்பரிய சின் னங்கள் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த் துள்ளது.

உலகின் மிகப் பழைமை யான நாகரிகமாக சிந்து சமவெளி நாகரிகம் போற் றப்படுகிறது. இந்திய துணைக் கண்டம் முழு வதும் சிந்துசமவெளி மக்கள் வாழ்ந்திருந்தது பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கைவிடப்பட்ட நகரங்கள்

பாகிஸ்தானில் மட்டு மல்லாமல் சிந்துசமவெளி நாகரிகத் தடங்கள், கை விடப்பட்ட நகரங்கள் வட இந்தியாவின் பல இடங்களில் இருக்கின் றன. குறிப்பாக, பாகிஸ் தான் எல்லையில் குஜ ராத் மாநிலத்தின் கட்ச் பிராந் தியத்தில் உள்ள தோலா விரா மற்றும் அகமதாபாத் நகர் அருகே உள்ள லோத்தல் ஆகிய நகரங்கள் உள்ளன. இதில் மிக முக்கியமான தாக கருதப்படுவது தோலா விரா நகரம்தான்.

தோலாவிரா நகரம் என்பது சதுப்பு நிலமாக பாலைவனமாக விரிந்து பரந்து கிடக்கும் குஜராத் தின் ரான் ஆப் கட்ச் என்ற பகுதியின் நடுவே அமைந்துள்ளது. சிந்து சமவெளி மக்கள், பாலை வனத்துக்குள் மிக செழிப் பான வாழ்க்கையை திட் டமிட்டு வாழ்ந்துள்ளனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வியப்பளிக்கும்

சேமிப்பு கட்டமைப்பு

தோலாவிராவின் மிகப் பெரிய ஆச்சரிய மான விஷயம் என்ன வென்றால் பிரமாண்ட நீர் சேமிப்பு கட்டமைப்பு என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தோலாவிரா நகரத் தின் கட்டமைப்பு இன் றைய நவீனத்தைவிட மிக அற்புதமானதாக திட்ட மிட்டு கட்டப்பட்டுள்ள தாக தொல்பொருள் ஆய் வாளர்கள் தெரிவிக்கின் றனர். நிலத்தின் கீழே அமைந்துள்ள நீர் கட்ட மைப்புகள் பிரம்மாண்ட மாக உள்ளன.

தோலாவிரா நகரத் தின் அருகே மழைக்காலங் களில் பெருக்கெடுத்து ஓடிய மான்சர் ஆற்று வெள்ளத்தை அப்படியே தங்கள் நகருக்குள் திசை திருப்பி சேமித்து தோலாவிராவில் வாழ்ந்த சிந்துசமவெளி மக்கள் பயன்படுத்தி உள்ளனர். கால்வாய், நிலத்தின் கீழே பெரும் நீர்த்தொட்டிகள் என தோலாவிராவில் அமைந்துள்ளன.

இந்த அமைப்புகளை ஆய்வுசெய்த பின்னரே உலக பாரம்பரியச் சின் னங்கள் பட்டியலில் தோலாவிரா சேர்க்கப் பட்டது. இதற்கான முறையான அறிவிப்பை யும் யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment