அதானி நிறுவனங்களின் முறைகேடு குறித்து செபி விசாரணை: பங்குகள் கடும் வீழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 21, 2021

அதானி நிறுவனங்களின் முறைகேடு குறித்து செபி விசாரணை: பங்குகள் கடும் வீழ்ச்சி

டோக்கியோ, ஜூலை 21- அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய இந்தத் தொடர், கரோனா வைரஸ் பெருந் தொற்று காரணமாக தற்போது நடத்தப்பட உள்ளது.

டோக்கியோவில் அண்மைக் காலமாக மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர். பின்னர் ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்த 3 வீரர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒலிம்பிக் நிர்வாகக் குழு வினர் தெரிவித்தனர்.

இந்த 3 வீரர்களும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த அடையாளத்தை நிர்வாகக் குழுவினர் வெளியிடவில்லை. இத னைத் தொடர்ந்து அடுத்தடுத்து சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை ஒலிம்பிக் போட் டிக்கு வந்தவர்களில் 10 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதில் 5 பேர் வீரர் களுடன் வந்தவர்கள், ஒருவர் ஒப் பந்ததாரர், ஒருவர் பத்திரிகையாளர் என 10 பேருக்கு தொற்று கண்டறி யப்பட்டுள்ளது என்று போட்டி நிர்வாகக் குழுவினர் தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியைக் காண வந்தவர்களில் 55 பேர் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபாதுகாப்பு அம்சங்கள், தீவிர பரிசோதனைக்குப்பின் அனு மதிக்கப்படக்கூடிய ஒலிம்பிக் கிரா மத்துக்குள் தங்கி இருந்த வீரர் களுக்கு கரோனா தொற்று ஏற் பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இந்தநிலையில் அமெரிக்கா வைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங் கனை ஒருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள் ளது. அவர் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் தனி மைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக ஏற்பாட் டாளர்கள் தெரிவித்துள்ளனர். அவருடன் தொடர்பில் இருந்தவர் களுக்கும் கரோனா பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் தெரி விக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment