இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சான்றிதழ் வழங்க பெற்றோரின் வருமானத்தை கணக்கிட வேண்டாம்

தமிழ்நாடு அரசு அறிவுரை

சென்னை, ஜூலை 21 இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருக்கு சான்றிதழ் வழங்கும்போது பெற்றோ ரின் ஆண்டு வருமானத் தில் ஊதியம் மற்றும் விவ சாய வருமானத்தை கணக் கில் கொள்ளாமல் தாம தமின்றி சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது,

இதுதொடர்பாக தமிழ் நாடு அரசின் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர் மற் றும் சிறுபான்மையினர் நலத் துறை முதன்மை செயலர் .கார்த்திக், அனைத்து மாவட்ட ஆட் சியர்களுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கை:

ஒன்றிய அரசு பணிகளி லும், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) வளமான பிரிவினரை நீக்கி 27 சதவீத இடஒதுக் கீடு அளிக்கப்படுகிறது.

அந்த வகையில், வள மான பிரிவினரை நீக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பை (ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம்) ஊதியம் மற்றும்விவசாய வருமானத்தை சேர்க்கக் கூடாது என வழிகாட்டு நெறிமுறையில் விளக்கப் பட்டுள்ளது.

எனவே, ஒன்றிய அர சின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சான்றிதழ் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார் கள். சான்றிதழ் வழங்கும் போது பெற்றோரின் ஆண்டு வருமானத்தில் ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் எவ்வித தாமதமின்றி இதர பிற் படுத்தப்பட்ட வகுப்பின ருக்குச் சான்றிதழ் வழங்கு மாறு சம்பந்தப்பட்ட வரு வாய்த் துறை அதிகாரிக ளுக்கு தகுந்த அறிவுரை கள் அளிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

இவ்வாறு சுற்றறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

Comments