ஓய்வுபெற்ற பிறகும் பொது வெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 22, 2021

ஓய்வுபெற்ற பிறகும் பொது வெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாதா?

முன்னாள் அய்..எஸ்., அய்.பி.எஸ்.அதிகாரிகள்109 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம்

புதுடில்லி, ஜூலை 22- பணி ஓய்வுபெற்ற பிறகும் பொதுவெளியில் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று ஒன்றிய பா... அரசு ஓய்வூதிய விதிகளில் கொண்டு வந்துள்ள திருத்தங்களுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளதுஇதுதொடர்பாக, முன்னாள் அய்..எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள் 109 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒன்றிய அரசின் அமைப்புகளில் பணியாற்றிய நிர்வாகப் பணி அதிகாரிகள் தங்கள் பணிக் காலத்திற்குப் பிறகும், துறை சார்ந்த மற்றும் துறையில் பணியாற்றும் நபர்கள் குறித்த எந்த முக்கிய தகவலையும் வெளியில் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற நிபந்தனைகள் உள்ளிட்ட புதிய விதிகளை ஒன்றிய அரசு அண்மையில் அறிவித்தது.

இதற்காக ஒன்றிய நிர்வாகப் பணி (ஓய்வூதிய) திருத்த விதிகள், 2021-அய் (Public Grievances and Pensions on 31 May 2021) கொண்டு வந்தது. அதில், பொது வெளியில் தகவல்களை வெளியிட வேண்டு மானால், தாங்கள் பணியாற்றிய அமைப்பின் தலைவரிடமிருந்து முன் அனுமதி பெறுவது கட்டாயம் என்று அறிவித்தது.

துறை சார்ந்த முக்கியமான தகவல்களை பொது வெளியில் வெளியிடுவதற்கு 2007விதிகளில் துறைத் தலைவரிடமிருந்து அனுமதி பெற்றாலே போதும் என இருந்தது. தற்போது அது

நிர்வாக அமைப்பின் தலைவரிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்று திருத்தப் பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, அரசின் இந்த புதிய விதிகள் தேவையான மாற்றங்களுக்குப் பிறகு, விரைவில் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், ‘உரிய அனுமதி இல்லாமல் தகவலை வெளியிட மாட்டோம்என அனைத்து ஊழியர்களும் அமைப்புத் தலைவருக்கு ஓர் உறுதிமொழியைக் கொடுக்க வேண்டும்; அதன்படி நடக்க வேண்டும்.

ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும்!

மாறாக, விதிகளை மீறி தகவல்களை வெளியிட்டால், அந்த முன்னாள் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும் என்று திருத்தப்பட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளது. இதற்குத்தான் தற்போது எதிர்ப்பு எழுந்துள்ளது. முன்னாள் அரசு ஊழியர்கள் அடங்கிய 109 பேர் கொண்ட குழுவும், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. மார்ச் 2008இல் அறிவிக்கப்பட்ட ஒன்றிய நிர்வாகப் பணி திருத்த விதிகள், 2007இன் பாதுகாப்புத் துறை சார்ந்த ஊழியர்கள் அனைவரும் எந்தவொரு முக்கிய மான தகவலையும் வெளியிடுவதற்கு ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அரசு ஊழியர்கள் தெரிவிக்கும் தகவல்கள், இந்தியாவின் இறையாண்மை யையும், ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் என்று முன்னரே கூறப்பட்டுள்ளது. எனினும், சமீபத்திய திருத்தப் பட்ட விதிமுறையானது எந்தவொரு அரசு ஊழியரும், எந்தவொரு உளவுத்துறை அல்லது பாதுகாப்பு தொடர்பான அமைப்பிலும் பணி புரிந்தவர், நிறுவனத்தின் தலைவரின் முன் அனுமதி இல்லாமல், ஓய்வு பெற்ற பின்னர், அனுபவம் தொடர்பான மற்றும் எந்தவொரு விஷயத் தையும் வெளியிடக்கூடாது.

எந்த வொரு பணியாளர்கள் மற் றும் அவரது பதவி மற்றும் அந்த அமைப்பில் பணியாற்றுவதன் மூலம் பெறப்பட்ட நிபுணத்துவம் அல்லது திறன் பற்றிய எந்தவொரு குறிப்பு அல்லது தகவல் உட் பட அமைப்பின் எந்த தகவலையும் வெளியிடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது சேர்க்கப்பட்டுள்ளது!

மேலும் 2007 விதிகளில் எந்தெந்த பணியாளர் களுக்கெல்லாம் தடை என்பதைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. ஆனால் அது தற்போது சேர்க்கப் பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஓய்வூதிய விதிகள் உளவுத்துறை, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு, வருவாய் புலனாய்வு இயக்குநரகம், ஒன்றிய பொருளாதார புலனாய்வு பணியகம், அமலாக்க இயக்குநரகம், விமான ஆராய்ச்சி மய்யம், எல்லை பாதுகாப்பு படை ஆகிய வற்றிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய காவல்படை, தேசிய பாதுகாப்பு காவலர்கள், ஒன்றிய தொழில் துறை பாது காப்பு படை மற்றும் இந்தோ திபெத்திய எல்லை காவல்படை, போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம், சிறப்பு எல்லை படை, சிறப்பு பாதுகாப்பு குழு மற்றும் நிதி புலனாய்வு பிரிவு உள்ளிட்ட துறையினரும் அடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 மற்றும் 2021 விதிகளில் அய்..எஸ்., அய்.பி.எஸ். உள்ளிட்ட பணியாளர்களையும் இணைக்க திருத்தப்பட்ட சி.சி.எஸ். விதிகள் 1972 வழி வகுக்கிறது. இதன் மூலம் இந்த விதிகள் டிசம்பர் 31, 2003 அல்லது அதற்கு முன்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும். ஓய்வு பெற்ற அதிகாரிகள், முன்னாள் அரசு ஊழியர்கள் தங்கள் பணி செய்த ஆண்டுகளில் அவர்கள் செய்த வேலையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி தங்கள் நினைவு குறிப்புகளை கட்டுரையாக எழுதுவதும், அனுபவ அறிவினை பயன்படுத்தி நடப்பு விவரங்களை பற்றி கருத்து கூறுவதும் உலகளவில் பாராட்டப்படும் ஒரு விஷயமாகும். ஆனால் தற்போதைய புதிய விதிகள் அதற்குத் தடை விதிக்கின்றன.

மோடிக்கு கடிதம்

இந்நிலையில்தான், இந்த புதிய விதிகள் குறித்து முன்னாள் அய்..எஸ்., அய்.பி.எஸ். உள் ளிட்ட குடிமைப்பணி அதிகாரிகள் 109 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி யுள்ளனர்.

அதில், "மே 31, 2021 அன்று, ஒன்றிய பணியாளர்கள், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ள- அண்மையில் திருத்தம் செய்யப்பட்ட ஒன்றிய ஓய்வூதிய விதிகளைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம் , மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானோம்" என்று தெரிவித்துள்ளனர்.

"சில விஷயங்களைப் பற்றி எழுதுவது கடுமையான தவறான நடத்தைக்கு சமமான தாக இருந்தால், ஓய்வூதியத்தைப் பறிக்கும் நடவடிக் கையை அரசாங்கம் மேற்கொள்ள ஏற்கெனவே சட்டத்தில் இடமுள்ளது.

திரும்பப் பெறப்பட்டது!

அவ்வாறிருக்க, முன்னாள் அரசு ஊழியர் களுக்கான ஓய்வூதிய விதிகளில் புதிதாக இத்த கைய திருத்தங்களைக் கொண்டுவர வேண்டிய தேவை என்ன? என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை"என்று குறிப்பிட்டுள்ளனர்.

2008-ஆம் ஆண்டில், ‘அய்பிமற்றும்ராவில் (IB and RAW) பணியாற்றிய அதிகாரி களுக்கு யு.பி.. அரசாங்கம் இதேபோன்ற உத்தரவை அறிமுகப்படுத்த முயன்றது. அந்த உத்தரவு பரவலாக விமர்சிக்கப்பட்டு இறுதி யில் திரும்பப் பெறப்பட்டது என்பதையும் அய்..எஸ்., அய். பி.எஸ். அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு சுட்டிக் காட்டியுள்ளனர்.

பிரசார் பாரதிமுன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் சிர்கார், முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஷியாம் சரண், முன்னாள் உள் துறைச் செயலாளர் ஜி.கே. பிள்ளை மற்றும் டில்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் உள்ளிட்டோர் இந்த கடிதத்தில் கையெழுத் திட்டுள்ளனர்.

No comments:

Post a Comment