வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு சிறைத்தண்டனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 26, 2021

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு சிறைத்தண்டனை

அய்தராபாத், ஜூலை 26 வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெகபூபா பாத் தொகுதியில் தெலுங்கானா ராஷ்டிரியசமிதி கட்சியின் வேட்பாளர் மலோத்து கவிதா போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் தேர்தலின் போது வாக் காளர்களுக்குப் பணம் அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கவிதா மீது வழக்கு பதியப்பட்டது.  இந்த வழக்கை தெலங்கானா மாநிலம் நம்பள்ளியில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.  விசாரணையில் தேர்தலின் போது கவிதா வாக்காளர்களுக்குப் பணம்  கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.  இதைத் தொடர்ந்து கவிதாவுக்கு 6 மாதங்கள்  சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

மேலும் பணம் அளித்ததில் உதவியாக இருந்த அவரது உதவியாளருக்கும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக பிணையும் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment