கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம் பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 21, 2021

கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம் பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜூலை 21 மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்திய கடல் சார் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக் கல் செய்ய வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு..ஸ்டா லின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமருக்கு அவர் நேற்று (20.7.2021) எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஒன்றிய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள இந் திய கடல்சார் மீன்வள மசோதாவில் குறிப்பிடப் பட்டுள்ள விதிகள், கட லோர மீனவர் சமூகங்க ளின் நலன்களுக்கு எதி ராக உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 7ஆவது அட்டவணை யின் மாநிலப் பட்டிய லின்கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமை களை மீறும் சில உட்பிரிவுகளை கொண்டுள்ளது.

ஒன்றிய அரசால் முன் மொழியப்பட்டுள்ள மசோதாவில் உள்ள சில பிரிவுகளில், மீனவர்கள் மீதுகுற்றச்சாட்டு சுமத்து தல், சிறையில் அடைத்தல், மீனவர்களுக்கு எதிராக வலிய நடவடிக்கைகளை எடுத்தல், கட்டணம், பெரும் அபராதம் விதித் தல் போன்ற உட்பிரிவு கள் உள்ளன. இது பரவ லாக எதிர்ப்புகளையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம்.

அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளை பெற்று, மீனவர் நலன் காக்கும் வகையிலும், கடல் வளத்தைக் காக்கும் வகையிலும் புதிய மசோ தாவை பின்னர் தாக்கல் செய்யலாம். தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ள கடல்சார் மீனவர் மசோ தாவை நாடாளுமன்றத் தில் நிறைவேற்றும் முயற் சியை தொடர வேண்டாம்.

இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment