மருத்துவ சமூக சங்கங்களின் கோரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 24, 2021

மருத்துவ சமூக சங்கங்களின் கோரிக்கை

தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள (பதிவு எண் 297/54) சங்கத்தினர்கூடி பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து "திராவிடர் மருத்துவர் சமூக சங்கங்களின் கூட்டமைப்பு" ஒன்று 21.7.2021 அன்று உருவாக்கப்பட்டுள்ளது.

(1) தமிழ்நாடு சவர தொழிலாளர் சங்கம்.

(2) தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை மற்றும் தமிழ்நாடு முடி திருத்தும் அழகு கலை மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கம்.

(3) தமிழ்நாடு மருத்துவ சமுதாய மக்கள் கூட்டமைப்பு.

(4) நவ சமாஜ் தமிழ்நாடு.

(5) தமிழ்நாடு கொங்கு மருத்துவர் நல சங்கம்.

(6) தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளர் மத்திய சங்கம்.

(7) பண்டிதர் ஆனந்தம் அறக்கட்டளை முதலிய அமைப்புகள் ஒருங்கிணைந்துதான் "திராவிடர் மருத்துவ சமூக சங்கங்களின் கூட்டமைப்பாக" உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ஆம் தேதி ஒன்றிணைக்கப்பட்ட இந்த அமைப்பு 11 கோரிக்கை களைத் தீர்மானங்களாக நிறைவேற்றியுள்ளது.

1) மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியலில் உள்ள இடஒதுக் கீட்டில் மருத்துவ சமூக மக்களுக்கு 5 விழுக்காடு உள் ஒதுக்கீடு அளித்து எங்கள் சமூக மக்களின் கல்வி, வேலை வாய்ப்பிற்கு உத்தரவாதம் அளித்து சமூக நீதியை காக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

2) மருத்துவ சமூக மக்களுக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகளுக்கு/ இழிநிலைகளுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, ஷிசி/ஷிஜி மக்க ளுக்கு பாதுகாப்பாக உள்ள வன்தடுப்பு சட்டத்தை (றிசிஸி கிசிஜி) போன்று எங்களுக்கும் சட்டப்பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

3) மருத்துவ சமூக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு தனி நல வாரியம் அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

4) மருத்துவ சமூக மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த மாவட்டந்தோறும் கூட்டுறவு சங்கங்கள் அமைப்பதற்கும் அதன் மூலம் மானியத்துடன் கடனுதவி அளிப்பதற்கும் ஆவன செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

5) இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் திருக் கோயில்களில்  பணிபுரியும் இசைக் கலைஞர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்கக்கோரி உத்தரவிடும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

6) அரசு சித்த மருத்துவ கல்லூரிகளில் 20 விழுக்காடு இடத்தினை மருத்துவ சமூக மக்களுக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவிடும்படி கேட்டுக் கொள்கிறோம்.

7) புகழ்பெற்ற திருக்கோயில்களில் முடி காணிக்கை நிலையத்தில் மொட்டையடிக்கும் தொழில் புரியும் இந்த சமூக மக்களை அரசு ஊழியர்களாக அறிவிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறோம்.

8) புகழ்பெற்ற திருக்கோயில்களில் முடி காணிக்கை யினை இந்த சக மக்களுக்கு சேரும் வகையில் ஏல முறையை தவிர்த்த சங்கத்தின் பரிந்துரையின் அடிப்படையில் அவர்களுக்கு இலவசமாய் வழக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

9) இந்த சமூகத்தை சார்ந்த 60 வயதிற்கு மேற்பட்ட முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கும் மற்றும் இசைக் கலைஞர்களுக்கும் அரசு ஓய்வூதியம் அளிக்க ஆவன செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

10) மருத்துவ சமூகத்தை சேர்ந்த படித்த பட்டதாரிகள் மற்றும் வழக்குரைஞர்களுக்கு சமூக நீதியை காக்கும் வகையில் அரசால் நியமனம் செய்யப்படும் பதவிகளில் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பதவி வழங்க ஆவன செய்யும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.

11) மாவட்டங்கள்தோறும் இந்த சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கவும் அதில் குடியிருக்க வீடுகளை கட்டித்தரவும் ஆவன செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

முடி திருத்துவோர் நிலையம் தான் தொடக்கத்தில் திராவிட இயக்கத் தின் தொட்டிலாக - பாசறையாக இருந்தது. கழகப் பேச்சாளர்கள் சென்று தங்கும் இடமாகவும் இருந்தது.

அந்தத் தோழர்கள் வாடிக்கையாளர்களிடம் தந்தை பெரியார் கருத்துகளையும் சுயமரியாதை எண்ணங்களையும் எடுத்துக் கூறிக் கொண்டே இருப்பார்கள்.

சமுதாயத்தில் நலிந்த பிரிவினராக இருந்த அவர்கள் உயர் தட்டு மக்களால் ஏளனமாகவும் இளக்கரமாகவும் பார்க்கப்பட்ட ஒரு நிலையும், கால கட்டமும் உண்டு.

தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு - சுயமரியாதைக் கருத்துகள் சமுதாயத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்வின் பலா பலன் அவர்கள் மத்தியிலும் போய் சேர்ந்தது என்பதுதான் உண்மை.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பட்டியலில் அவர்கள் இடம் பெற்றிருந்தாலும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாசாரத்தில் இல்லை என்றாலும்அரசியல் ரீதியாகவோ, கல்வி உத்தியோக ரீதியாகவோ குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் இடம் என்பதைவிட நகர மன்றம், ஊராட்சி ஒன்றியம்ஊராட்சி மன்றம் என்ற அளவிலும்கூட ஓர் உறுப்பினர் என்ற நிலையை எட்டும் அளவுக்கும்கூட இல்லை என்பது யதார்த்த உண்மையாகும்.

சட்டமன்ற மேலவை என்ற ஒன்று இருந்த நேரத்தில் மக்கள் பிரதிநிதித்துவ முறையில் சவரத் தொழிலாளர், சலவைத் தொழிலாளர் உள்ளிட்ட பிரிவினருக்கு வாய்ப்பு அளிக்கும் வாய்ப்பு இருந்தது.

அரசியல் நோக்கத்தோடு தமிழ்நாட்டில் அது ரத்து செய்யப்பட்டது. சமூகநீதிக்கு ஏற்பட்ட ஒரு தடைக் கல்லாகும்.

மீண்டும் மேலவை கொண்டு வர வேண்டும் என்பதே தி.மு..வின் நோக்கமாக இருந்து வருகிறது. அதற்கான முயற்சிகளில் திமுக ஈடுபடும் என்று எதிர்பார்க்கலாம்.

"திராவிடர் மருத்துவர் சமூக சங்கங்களின் கூட்டமைப்பு நிறைவேற்றிய 11 தீர்மானங்களை தமிழ்நாடு அரசு தன் எல்லைக்குட்பட்ட வகையில் நிறைவேற்றிக் கொடுப்பது அவசியமாகும்.

அவர்களுக்காக சட்ட மன்றத்தில் பேசவோ, எடுத்துக் கூறவோ வாய்ப்பு இல்லாத நிலையில், திராவிட இயக்கக் கோட்பாடு என்ற கண்ணோட்டத்தில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, மிகவும் பிற்படுத்தப் பட்டோரிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்டுக் கிடக்கும் இம்மக்களின்பால் திமுக ஆட்சியின் சமூகநீதியுடன் கூடிய கருணைப் பார்வைபடும் என்று உறுதியாக நம்பலாம்.

காரணம் மானமிகு சுயமரியாதைக்காரரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், சட்டமன்றத்திலேயே தன்னைப் பற்றிக் குறிப்பிடும் போது மிக மிக என்று எத்தனை மிக வேண்டுமானாலும் போடலாம். அந்த அளவுக்குப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்று சொன்னதுண்டு.

அந்த வழிவந்த தளபதி மு.. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான மக்களாட்சியின் மகத்துவ மலராக மணம் வீசும் இந்த ஆட்சி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டின்பலன் இன்னும் போய்ச் சேராத சவரத் தொழிலாளர், சலவைத் தொழிலாளர், மண் பாண்டம் செய்யக் கூடியவர்கள் போன்ற பகுதியினருக்குக் கிட்டிட - கருத்தாய்வு, கணக்காய்வு நடத்திடவும் ஆவன செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.

தி.மு.. ஆட்சி செய்யாவிட்டால் வேறு எந்த ஆட்சியால்தான் செய்ய முடியும். எதிர்பார்க்கவும்தான் முடியும்

No comments:

Post a Comment