ஒன்றிய அரசு துறைகளில் 8 லட்சம் காலி பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

ஒன்றிய அரசு துறைகளில் 8 லட்சம் காலி பணியிடங்கள்

 புதுடில்லி, ஜூலை 30 ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் 25 ஆயிரத்து 267 ஊழியர் களையும், பணியாளர் தேர்வாணையம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 601 பேரையும், ரயில்வே தேர்வு வாரியம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 945 பேரையும் தேர்வு செய்துள்ளன.

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (29.7.2021) கேள்வி நேரத்தின்போது, கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு மார்ச் 1-ஆம் தேதிப்படி, அனைத்து மத்திய அரசு துறைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் 40 லட்சத்து 4 ஆயிரத்து 941 ஆகும். அவற்றில், அன்றைய தேதியில், 31 லட்சத்து 32 ஆயிரத்து 698 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். 8 லட்சத்து 72 ஆயிரத்து 243 பணியிடங்கள் காலியாக இருந்தன. கடந்த 5 ஆண்டுகளில், மத்திய பணியாளர் தேர்வாணை யம் 25 ஆயிரத்து 267 ஊழியர்களையும், பணி யாளர் தேர்வாணையம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 601 பேரையும், ரயில்வே தேர்வு வாரியம் 2 லட் சத்து 4 ஆயிரத்து 945 பேரையும் தேர்வு செய் துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

 70 விழுக்காடு மக்களின் உரிமைகளை தட்டிப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசு

தேஜஸ்வி சாடல்

பாட்னா, ஜூலை 30- பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி கூறுகையில், ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத் துமாறு, பீகார் சட்டமன்றத்திலிருந்து, ஒன்றிய அரசுக்கு இரண்டு முறை கோரிக்கை அனுப்பப் பட்டது. ஆனால், அதற்கு ஒன்றிய அரசு செவி சாய்க் கவில்லை. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த, 70 விழுக்காடு மக்களின் உரிமைகளை, ஒன்றிய அரசு தட்டிப் பறிக்கிறது என்றார்.

No comments:

Post a Comment