தருமபுரி, சேலம், புதுக்கோட்டை மண்டல கழக கலந்துரையாடல் கூட்டம் - தமிழர் தலைவரின் 78 ஆண்டுகால தொண்டறத்திற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு பெரியார் பிஞ்சு இதழுக்கு 1000 சந்தாக்கள் திரட்டி வழங்கிட முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 12, 2021

தருமபுரி, சேலம், புதுக்கோட்டை மண்டல கழக கலந்துரையாடல் கூட்டம் - தமிழர் தலைவரின் 78 ஆண்டுகால தொண்டறத்திற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு பெரியார் பிஞ்சு இதழுக்கு 1000 சந்தாக்கள் திரட்டி வழங்கிட முடிவு

அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 143 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி சுவரெழுத்து பணியை தீவிரப்படுத்த முடிவு

தருமபுரி, ஜூலை 12 10.7.2021 அன்று மாலை ஆறு மணியளவில் தருமபுரி சேலம் புதுக்கோட்டை மண்டல கலந்துரையாடல் கூட்டம் காணொலி வழியாக மிக சிறப்புடனும் எழுச்சிகரமாகவும் நடைபெற்றது .

இக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமை தாங்கி கருத்துரை வழங்கினார்.

கலந்துரையாடல் கூட்டம்  கடவுள் மறுப்புடன் தொடங்கியது.  சேலம் மாநகர செயலாளர் பா.வைரம் அவர்கள் வரவேற்புரையாற்ற,  மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன்  அவர்கள்  கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து  தொடக்க உரையாற்றினார்.

தொடர்ந்து மாநில மகளிரணி செயலாளர் தகடூர். தமிழ்ச்செல்வி , மாநில அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன் மாநில பக துணைத் தலைவர் அண்ணா.சரவணன்,மாநில பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் வா.தமிழ்பிரபாகரன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் .சுரேஷ், மாநில மாணவர்  துணைச் செயலாளர் .யாழ்.திலீபன், சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் கா..வெற்றி, தர்மபுரி மண்டல இளைஞரணி செயலாளர் வண்டி ஆறுமுகம் . சேலம் மண்டல மாணவர் கழக செயலாளர் .. தமிழர் தலைவர், மண்டல இளைஞரணி செயலாளர் புதுக்கோட்டை .வீரய்யா,சேலம் மண்டல தலைவர் கவிஞர் சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன், மண்டல செயலாளர் விடுதலை சந்திரன் , அறந்தாங்கி மாவட்ட தலைவர் .மாரிமுத்து புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் பேரா.மு அறிவொளி,ஆத்தூர் மாவட்ட தலைவர்

.வானவில்,  மாவட்ட செயலாளர் நீ.சேகர், சேலம் மாவட்ட செயலாளர் ..இளவழகன்,  மாவட்ட துணைத்தலைவர் ஜங்ஷன் பரமசிவம் சேலம் மாநகர செயலாளர் பா.வைரம், சேலம் சி. பூபதி, மேட்டூர் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட செயலாளர் எடப்பாடி கா.நா.பாலு , தருமபுரி மாவட்ட தலைவர் வீ .சிவாஜி , தர்மபுரி .. தலைவர் கதிர் செந்தில், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் .அறிவரசன், மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம், ஓசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் மகளிர் அணி தோழர்கள் சார்பில் தருமபுரி மண்டல மகளிரணி செயலாளர் மு.இந்திராகாந்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பில் பழனி புள்ளையண்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கி சிறப்பித்தனர். கருத்துரை வழங்கிய பெருமக்கள்  அனைவரும் தமது பங்களிப்பாக பெரியார் பிஞ்சு இதழுக்கு சந்தாக்களை அறிவித்து மகிழ்ந்தனர்.

மண்டல கழக கலந்துரையாடல் கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தீர்மானம் 1 :

அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 143 ஆவது பிறந்தநாளை வீடு தோறும் , ஊர் தோறும் ,ஒவ்வொரு மாவட்டம் தோறும் மிக எழுச்சியுடன் தமிழர் தேசிய திருநாளாக கொண்டாடுவது எனவும் ,அய்யா அவர்களின் பிறந்தநாளை  ஒட்டி அனைத்து பகுதிகளிலும் சுவரெழுத்து பணியினை மிகத் தீவிரமாக முன்னெடுப்பது எனவும் முடிவு செய்யப்படுகிறது

தீர்மானம் 2:

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் உயராய்வு மய்யம் மற்றும் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் கடந்த ஜூன் மாதம் மண்டல அளவில்  நடத்தப்பட்ட பெரியாரியியல் மாணவர் பயிற்சி முகாமில் பங்கேற்றுபெரியார் பண்ணையின் -திராவிடர் நாற்றுஎன பாராட்டப்பட்ட அனைத்து  மாணவர்களையும் இக் கூட்டம் பாராட்டி மகிழ்கிறது.  இப்பயிற்சி முகாம் வெகு சிறப்பாக நடைபெற   ஒத்துழைப்பு வழங்கிய கழகப் பொறுப்பாளர்கள், பயிற்சி முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும்  மண்டல கூட்டம் தமது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவிக்கிறது

தீர்மானம்  3:

வருகிற ஜூலை  19 முதல் ஜூலை 29  வரை நடைபெறவிருக்கும்  மகளிர்க்கான பெரியாரியல் பயிற்சி முகாமில் பெருமளவில் மகளிர் தோழர்களை இணைத்து சிறப்புடன் நடத்துவது எனவும்,

திராவிடர் கழக மகளிரணி , திராவிடர் மகளிர் பாசறை   சார்ந்த தோழர்களை உள்ளடக்கி பெருமளவில் புதிய தோழர்களோடு பயிற்சி முகாமை நடத்திட ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொள்வது என இக் கூட்டம் முடிவு செய்கிறது

தீர்மானம் 4:

தமிழர் தலைவர்  அவர்களின் 78 ஆண்டு கால தொண்டற பணிக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு  ஒட்டி ஒவ்வொரு மாவட்ட கழகத்தின் சார்பிலும் நூறு பெரியார் பிஞ்சு சந்தாக்களை திரட்டித் தருவது என முடிவு செய்யப்படுகிறது

தீர்மானம் 5:

 மாநில சுயாட்சி , சமூக நீதி , மொழி உணர்வு உள்ளிட்ட திராவிட இயக்கக் கொள்கைகளை முன்னிறுத்தி சிறப்பாக நடைபெற்று வரும் தமிழ்நாடு  அரசுக்கு பாராட்டு  தெரிவிப்பதுடன் திராவிட இயக்க சிந்தனையோடு தமிழ்நாட்டை  முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல அயராது உழைக்கும்  தமிழக முதல்வருக்கும், அவரது தலைமையிலான அமைச்சரவைக்கும்  கூட்டம் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவிக்கிறது

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தருமபுரி மண்டல செயலாளர் பழ.பிரபு முன்மொழிந்து உரையாற்றினார் மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரப்பாண்டியன் இணைப்புரை வழங்கி கூட்டத்தை ஒருங்கிணைத்தார். நிறைவாக தருமபுரி மாவட்ட  திராவிட மாணவர் கழக   தலைவர் சமரசம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment