மதுரை எய்ம்ஸில் வரும் கல்வியாண்டில் 50 எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்க முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 27, 2021

மதுரை எய்ம்ஸில் வரும் கல்வியாண்டில் 50 எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்க முடிவு

தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, ஜூலை 27 மதுரை எய்ம்ஸில் வரும் கல்வியாண்டில் 50 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தொடங்குவது தொடர் பாக திட்ட அறிக்கை அளிக்குமாறு எய்ம்ஸ் நிறுவனத்தை தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண் டுள்ளது என உயர் நீதி மன்றத்தில் சுகாதாரத் துறை செயலர் தெரிவித்தார்.

மதுரை தோப்பூரில் அறிவிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை தற்காலிக இடத்தில் அமைத்து, அங்கு வெளி நோயாளிகள் பிரிவு மற் றும் எம்பிபிஎஸ் மாண வர் சேர்க்கையை தொடங் கவும் உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த பஷ் பவனம் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு  சுகாதாரத் துறை முதன்மைச் செயலர்  ராதாகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மதுரை எய்ம்ஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 16.7.2021-இல் நடைபெற்றது.

இதில் பல்வேறு விஷ யங்கள் குறித்து விவாதிக் கப்பட்டது.

அப்போது வரும் கல்வியாண்டில் 50 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை தொடங் குவது தொடர்பாக திட்ட அறிக்கை அளிக்குமாறு எய்ம்ஸ் நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டோம்.

அதன்படி எய்ம்ஸ் நிறுவன திட்ட அறிக்கை அளித்தால், எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை தொடங்குவதற்கு தேவை யான இடத்தை கண்ட றிந்து எய்ம்ஸ் நிறுவனத் துக்கு அரசு தகவல் தெரி விக்கும் எனக் கூறப்பட் டிருந்தது.

இதையடுத்து தமிழ் நாடு அரசின் பதில் மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தர விட்டு, விசாரணையை ஜூலை 30-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத் தனர்.

No comments:

Post a Comment