கரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பயிற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 16, 2021

கரோனா 3ஆவது அலையை எதிர்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பயிற்சி

சென்னை,ஜூலை16- சென்னை கிண்டி கிங் அரசு கரோனா சிறப்பு மருத்துவமனையில் முதல் மற்றும் 2ஆவது அலை யின் போது நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தமிழ் நாடு மட்டுமின்றி வெளிமாநிலங் களில் இருந்தும் இங்கு வந்து சிகிச்சை பெற்றனர். இங்கு சிகிச்சை பெற்றவர்களில் 97 விழுக்காட்டினர் குணமடைந் துள்ளனர். இந்நிலையில் 3ஆவது அலை தொற்றை எதிர்கொள்ள கிண்டி கிங் மருத்துவமனை மருத்துவர்கள் தயாராகி வரு கின்றனர்.

அதற்காக உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை எப்படி கையாள வேண்டும் என மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரு கிறது. இதுகுறித்து மருத்துவ மனை இயக்குநர் மருத்துவர் நாராயண சாமி கூறியதாவது:-

இதுவரை இங்கு 20 ஆயிரத்து 289 பேருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. அதில் 18 ஆயிரத்து 932 பேர் குணமடைந் துள்ளனர். அதன்படி 97 சதவீதம் பேர் குண மடைந்து வீடு திரும்பியுள்ளனர். இங்கு வெளி மாவட்டங்களை சேர்ந்த 1,498 பேரும், வெளி மாநிலங் களை சேர்ந்த 25 பேரும், வெளிநாடுகளை சேர்ந்த 22 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேபோல் இதய, நுரை யீரல் உள்ளிட்ட 10 நிபுணர் களுடன் கரோனாவுக்கு பிந் தைய சிகிச்சை மய்யம் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 800 படுக்கை களில் 100 படுக்கைகளில் தான் நோயாளிகள் சிகிச்சை பெறு கின்றனர். 3ஆவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை சமாளிக்க 100 படுக் கைகள் கொண்ட குழந்தைகள் சிகிச்சை பிரிவு அமைக்கப் பட்டுள்ளது. எனவே, குழந்தை களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணி யாளர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.

அதேபோல் உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களை பயன் படுத்துவது, தற்போதைய நவீன தொழில்நுட்பங்கள் குறித்து மருத்துவர்களுக்கும், செவிலியர் களுக்கும் பயிற்சி அளிக்கப்படு கிறது.

மேலும் அவசரகாலத்தில் மருத்துவ உபகரணங்களை எப்படி கையாள வேண்டும் என் பதையும் மருத்துவ பணியாளர் களுக்கு பயிற்சி அளித்து வரு கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment