ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வர உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வர உத்தரவு

சென்னை, ஜூலை 30 தொடக்கக் கல்வித்துறையில் பணி யாற்றும் ஆசிரியர்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தின மும் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன நிலையில், இணையம் வழியாக வகுப் புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் தினமும் பள்ளிக்கு வர உத்தர விடப்பட்டுள்ளது.

பள்ளி கால அட்டவணை தயாரித்தல், பள்ளி வளாகங் களை தூய்மைப்படுத்துதல் பணிக்காகவும்  மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகம் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வந்திருந்த நிலையில் 68 நாட்களுக்கு பிறகு  சற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு வருமானச் சான்றிதழ், ஜாதிசான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும்

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். உத்தரவு

சென்னை, ஜூலை 30- தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி  மாணவ,மாணவியர்களுக்கு வருமானச் சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக் கிணங்க, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர் களிடமிருந்து, வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ் கோரி பெறப்படும் மனுக்கள் மீது எவ்வித கால தாமதமின்றி உடனடியாக பரிசீலித்து, அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க வட்டாட்சியர்கள் மற்றும் கோட்டாட்சியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு இருப்பதால் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு தேவையான சான்றி தழ்கள் உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து இ-சேவை  மய்யங்களிலும் மாணவர் கள் சான்றுகளை  கூட்ட நெரிசல் இன்றி பெற்றுச் செல்ல ஏதுவாக குறிப்பிட்ட நாட்களை அதற்கென ஒதுக்கி, எவ்வித இடையூறுகளும் இன்றி சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.

சான்றுகளை வழங்குவதில் தேவையற்ற கால தாமதத் தினை தவிர்த்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தவறாது சான்றுகள் வழங்கப்பட வேண்டும் தேவையின்றி மாண வர்களை அலைக்கழிக்கக் கூடாது' 

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment