உலகில் 2.9 கோடி மக்கள் கல்லீரல் நோய்களால் பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 30, 2021

உலகில் 2.9 கோடி மக்கள் கல்லீரல் நோய்களால் பாதிப்பு

சென்னை, ஜூலை 30 உலக கல்லீரல் அழற்சி தினத்தை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மஞ்சள் காமாலை உள்ளிட்ட கல்லீரல் நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சைப் பிரிவுத் தலைவர் ரேவதி கூறியதாவது:

ஹெபடைடிஸ் பி வைரஸ் கிருமியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர் மருத்துவர் ப்ளூம்பெர்க் என்பவரை பாராட்டும் வகையில், அவ ரது பிறந்த நாளான ஜூலை 28 ஆம் தேதி `உலக கல்லீரல் அழற்சிதினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் 2.9 கோடி மக்கள் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 10.1 லட்சம் பேர் நோயின் தீவிரத்தால் உயிரிழக்கின்றனர். இந்த நோயை 2030 ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக அகற்றுவதே உலக சுகா தார நிறுவனத்தின் குறிக் கோளாகும். அதற்கான முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கல்லீரல் பிரிவு வைரஸ் கிருமியை கண்டறியும் பரிசோதனை முகாம் நடத்துவது, நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போடுவது போன்றவற்றில் ஈடுபடுவதுடன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையை இலவசமாக அளித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 1,500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காலத்திலும் கர்ப்பிணிகள், செவிலியர்கள், சுகாதார கள பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரி வித்தார்.

No comments:

Post a Comment