பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.1 லட்சம்

ஈரோடு - ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் .நடராஜன் அவர்கள் சிறுகனூர் - பெரியார் உலகத்திற்கு  ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையை மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு சண் முகம், மாவட்ட தலைவர் கு.சிற்றரசு, மாவட்டச் செயலாளர் மா.மணிமாறன், மாநில இளைஞரணி துணை செயலாளர் தே. காமராஜ் ஆகியோரிடம் வழங்கினார். அவருக்கு பயனாடை அணிவித்து  இயக்கப் புத்தகங்கள் மாவட்டக் கழகம் சார்பில் வழங்கப்பட்டது.

நன்கொடை அளித்த தலைமையாசிரியர் .நடராஜன் அவர்களது மூத்த மகன் நெடுஞ்செழி யன் ஈரோடு பொறியியல் கல்லூரி பேராசிரியர், இளைய மகன் மருத்துவர் இளஞ்செழியன் சென்னை மாநகராட்சியில் மருத்துவராகப் பணி யாற்றுகிறார். அவரது வாழ்விணையர் மருத்துவர் கயல்விழி கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் (பேத்தி முறை) அண்ணன் கோவிந்த ராஜ் அவர்களின் பேத்தியாவார்.

Comments