ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 26, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: “சீக்கிரமாக பிஜேபி கூட்டணியில் சேருங்கள்; அமலாக்கத் துறையிடமிருந்து தப்பிக்கலாம்என்று மும்பையில் சிவசேனாவுக்கு பா... எம்.எல்.. பிரதாப் சர்நாயக் கடிதம் எழுதியுள்ளது எதைக் காட்டுகிறது?

- வேலு, செங்குழி, அரியலூர்.

பதில்: பி.ஜே.பி. கூட்டணி உருவாக்கம்; பி.ஜே.பி. ஆட்சிகள் பல மாநிலங்களில் கட்சித்தாவல்கள் மூலம் உருவாதல், பா... ஆட்சியில் எதிர்க்கட்சி (காங்கிரஸ் போன்ற கட்சிகள்) ஆட்சிக் கவிழ்ப்புகள் எல்லாம் எப்படி சாத்தியமாகின்ற என்பதற்கு பா... எம்.எல்..வின் கருத்தே மூல ஆதார சான்றாவணம் போல் உள்ளது! என்ன வினோத வளர்ச்சி! பாருங்கள்.

கேள்வி: வருமானமின்றி உள்ள வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தயாரிக்கப்படும் என்று அறிவித்தது பற்றி தங்களின் கருத்து?

- அங்காளம்மாள், திருவொற்றியூர்.

பதில்: போற்றி வரவேற்க வேண்டிய அடிப்படையான அமைதிப் புரட்சி, தமிழ்நாட்டு வேளாண்மை வரலாற்றில்! புதுமை, புத்தாக்கம், புதுவாழ்வு உழவர் எழுச்சி வரலாற்றில்!!

கேள்வி: புதிய ஆட்சியின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் ஆற்றிய உரையில் தந்தை பெரியார் காண விரும்பிய சுயமரியாதைச் சமூகமாக தமிழ்நாட்டை உருவாக்குவது நோக்கம் என்று கூறியுள்ளாரே?

- இல. சீதாபதி, மேற்கு தாம்பரம்.

பதில்: அது அருமையான மவுனமான கொள்கைப் புரட்சி - அதுவும் ஆளுநர் வாயிலிருந்தே வரும் நிலை!

கேள்வி: அண்மையில் ஒன்றியத் தலைநகர் டில்லி சென்றிருந்த நமது முதல்வர் மு..ஸ்டாலின் அவர்கள் திருமதி சோனியா காந்தி அவர்களைச் சந்தித்தபோது அவருக்குJourney of a Civilization: Indus to vaigaiஎன்ற ஆங்கில நூலை பரிசாக அளித்தார்.  அந்நூலின் சிறப்பைப் பற்றி கூற இயலுமா?

- வே.பெருமாள்சாமி, திண்டிவனம்.

பதில்: வாழ்வியல் சிந்தனைகளில் சில மாதங்கள் முன்பே எழுதியுள்ளோம். ஒடிசா அரசின் ஆலோசகரும், மேனாள் தலைமைச் செயலாளருமான திரு. பாலகிருஷ்ணன் அய்..எஸ். எழுதிய திராவிட நாகரிகம், மொழி, சிந்துவெளி நாகரிகம் பற்றிய அருமையான ஆங்கிலத் தொகுப்பு ஆய்வுச் சுரங்கம் அந்நூல்.

திராவிட நாகரிகத்தைப் பரப்பும் பாண்பாட்டுத் தூதுவராகவும் நமது முதலமைச்சர் கூடுதல் பணிகளை வாய்ப்பு  ஏற்படும்போது நிகழ்த்துகிறார் என்பது ஆச்சரியம், ஆனால் உண்மை!

கேள்வி: இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாட்டில் மட்டும்தான் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. அதற்குக் காரணம் என்ன?

- சீ. முனியம்மாள், வெங்கோடு.

பதில்: பகுத்தறிவு விதைக்கப்பட்ட பூமியல்லவா? அதனால் இந்த தயக்கமின்மையான வரவேற்பு - ஆர்வம்!

பண்பட்ட தமிழ்நாடு என்பதற்கு மற்றுமோர் சாட்சியம்!

கேள்வி: தமிழ்நாடு அரசின் செயல்பாடு ஜெட் வேகத்தில் இருப்பதால் தமிழ்நாட்டில் கரோனா தொற்று கணிசமான அளவில் குறைந்துள்ளது என்று அனைத்துத் தரப்பினரும் பாராட்டுவதை முதல்வர் மு..ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதலாமா?         

  - இர. கார்த்தி, மேடவாக்கம்.

பதில்: அதில் என்ன சந்தேகம் தோழரே! பதவியேற்கு முன்பே அவர் அந்தப் பணியைத் துவக்கிவிட்டாரே!

கேள்வி: தொலைக்காட்சி விளம்பரங்களில் ஜாதி அடிப்படையிலான திருமண விளம்பரங்களை காட்டுகிறார்கள்.. வெள்ளாளக் கவுண்டர்மேட்ரிமோனியல் என்றும், நாடார் மேட்ரிமோனியல் என்றும், ஆதிதிராவிடர் மேட்ரிமோனியல் என்றும் காட்டுகிறார்களே அய்யா, இதனை சட்டரீதியாகத் தடுக்க முடியுமா ?

- பீம.சத்தியமூர்த்தி, மாரவாடி, தருமபுரி.

பதில்: ஜாதியை இன்னும் சட்டபூர்வமாக ஒழிக்கவில்லையே! பின் எப்படி தடுக்க முடியும்? ஜாதி ஒழிப்புச் சட்டத்திருத்தம் அரசமைப்புச் சட்டக்கூறு 17ஆவது பிரிவில் திருத்தம் செய்தால் ஜாதி ஒழிய வழியேற்படும் என்று 1973லேயே தந்தை பெரியார் காட்டிய வழி இன்னமும் சட்டமாகவில்லையே! என் செய்வது?

 கேள்வி: கல்லூரி முதல் ஆண்டிலேயே சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் என்று கூறுவது சரியானதா?

- மணிமேகலை, வீராபுரம், ஆவடி.

பதில்: ஆசை இருக்கலாம்; பேராசை பயன் அளிக்காது. முதல் ஆண்டில் கல்லூரிப்படிப்பே சரியாகப் பிடிபட சில மாதங்கள் ஆகும் என்ற யதார்த்தம் அறியாதவர்கள் அறிவுரை இது!

கேள்வி: தேசியவாத  காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அவர்கள் முயற்சியில் மூன்றாவது அணி 2024 தேர்தலில் பிஜேபியை வீழ்த்துமா? மீண்டும் பிஜேபி வெற்றிக்கு வித்திடுமா?

- தமிழ்ச்செல்வன், மதுரை.

பதில்: மூன்றாவது அணி பா...வைத்தான் பலப்படுத்தும் இரண்டே அணிகள் அமைந்தால்தான் பா..கவை பலவீனப்படுத்த வீழ்த்த முடியும்!

கேள்வி: திராவிடர் கழகத்திற்கென்று அதன் நோக்கத்தை விளக்கும் வகையில் தனித்த கொள்கை ஆவணம் ஏதாவது வெளியிடப்பட்டுள்ளதா?

- தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை

பதில்:திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை’ - (Dravidian Manifesto)  என்ற சிறு வெளியீடு துவங்கி, பல வெளியீடுகள். உயர்கொள்கை ஆவணம்என்ற பெயரில் தனிநூல் இல்லை. அமைப்புகளின் இலக்கு, சட்ட திட்ட நூல்கள் உண்டு. (‘நமது குறிக்கோள்’ - முதல் பாகம் காண்க)

No comments:

Post a Comment