மாலன்களுக்கு வருமா நல்ல மனம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 26, 2021

மாலன்களுக்கு வருமா நல்ல மனம்?

இவ்வாரகுமுதம்' இதழில் (30.6.2021) ‘‘விஷம் உண்ட கண்டன்'' என்ற பெயரில் திருவாளர்மாலன் ஆச்சாரியாரை அலக்காகத் தூக்கி ஆராதனை செய்திருக்கிறார். இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆச்சாரியார்களை நாமவளி பாடுவது நாராயணன்களின் நாடி நரம்புகளில் ஓடும் இரத்தவோட்டம் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

பெரியார் - மணியம்மை திருமணம்பற்றியது அது. அந்தத் திருமண யோசனையைக் கைவிடவேண்டும் என்றுதான் ராஜாஜி சொன்னார்!

ராஜாஜி ஆலோசனை சொல்லித்தான் அந்தத் திருமணம் நடந்தது என்று கூறி, ராஜாஜி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

ராஜாஜியின் ஜாதியைக் காட்டி அவர்மீது வார்த்தைக் கணைகள் வீசப்பட்டன. ஆனாலும், ராஜாஜிஅப்படி நான் ஆலோசனை கூறவில்லை' என்று சொல்லி, பெரியாருக்கு ராஜாஜி எழுதிய கடித்தை வெளியிட்டு, அரை நொடியில் தன்னைத் தற்காத்துக் கொண்டிருக்க முடியும். அந்தக் கடிதம் எழுதப்பட்ட பின் 23 வருடங்கள் ராஜாஜி உயிரோடு இருந்தார்.

அந்த 23 ஆண்டுகளில் அதைக் குறித்து ஒருவார்த்தைப் பேசவில்லை. வன்சொற்கள் எல்லாவற்றையும் புன்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மறைந்து

24 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கடிதத்தை வீரமணி வெளியிட்டார் என்றெல்லாம் எழுதிவிட்டு, ‘உங்களை ஒருவர் அவதூறு செய்யும்போது, ராஜாஜியை நினைத்துக் கொள்ளுங்கள். நான் அவரைத்தான் நினைத்துக் கொள்கிறேன்' என்று எழுதி முடித்திருக்கிறார் திருவாளர் மாலன்!

அது ஒருபுறம் இருக்கட்டும்; ராஜாஜி ஆலோசனையின் பெயரில்தான் பெரியார் - மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டார் என்று கூறி, பெரியார்மீது அவதூறுக் கணைகள் வீசப்படவில்லையா?

அக்கடிதத்தை பெரியார் வெளியிட்டு இருந்தால் அவர்மீது ஏவப்பட்ட அவதூறுகள் எல்லாம் சிதறி ஓடியிருக்குமே!

பெர்சனல்' என்று ராஜாஜி எழுதிய ஒரே காரணத்துக்காக அந்தக் கடிதத்தைப் பெரியார் வெளியிடவில்லையே - அவதூறுகளை அலட்சியப்படுத்தினாரே - அந்தப் பெருந்தன்மையை, உதாரண குணத்தை, பொது ஒழுக்கம் பேணிய தந்தை பெரியாரின் பெருநிலையை சுட்டிக்காட்ட நாராயணன்களுக்கு மனம் வரவில்லையே, ஏன்?

காரணம் தெரிந்ததே!

- கலி.பூங்குன்றன்,

துணைத் தலைவர், திராவிடர் கழகம்.

No comments:

Post a Comment