குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 12, 2021

குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

 சென்னை, ஜூன் 12 தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ளவிவசாயபெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து இன்று (12.06.2021) தண்ணீர் திறந்தார்.

காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி செய்ய பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 முதல்செப்டம்பர் 15ஆம் தேதிவரை 125 டி.எம்.சிதண்ணீர் தேவைப்படுகிறது. இதற்காகமேட்டூர் அணையிலிருந்து 99.74 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 25.26 டி.எம்.சிதண்ணீரானதுமழைமற்றும் நிலத்தடி நீர் மூலமாக பூர்த்தி செய்யப்படும்.

மேட்டூர் அணையிலிருந்து குறுவைசாகுபடிக்கு இன்று  3,000 கனஅடிதண்ணீர் திறக்கப்பட்டு,வரும் மாதங் களில்தேவைக்கேற்ப நீர் வழங்கப்படும். 12,10,000ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடிபாசனம் செய்ய செப்டம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை 205.60டி.எம்.சிதண்ணீர் தேவைப்படுகிறது. இதற்குமேட்டூர் அணையிலிருந்து 108.50டி.எம்.சி தண்ணீர் வழங்கியும், மீதமுள்ள 97.10 டி.எம்.சி தண்ணீர் பருவமழைமற்றும் நிலத்தடி நீர் கொண்டும் பூர்த்தி செய்யப்படும்.

மேட்டூர்அணையிலிருந்து காவிரி டெல்டாபாசனத்திற்கும் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கும்தண்ணீர் திறந்துவிடப்படும் காலங்களில், அணையின் மின் நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும்,சுரங்க மின் நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும்,எனமொத்தம் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது. அணையின் கீழ்பகுதியில் 7 கதவணைநீர்மின் நிலையங்கள் மூலம் தலா30 மெகாவாட் எனமொத்தம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது.வடகிழக்குபருவமழையினைபொறுத்துஅணையிலிருந்து தண்ணீர் எடுக்கும் அளவினைஉயர்த்தியும்,குறைத்தும் தேவைக்கேற்பவழங்கப்படும்.  

காவிரிடெல்டாவிவசாயப் பெருங்குடி மக்கள்அனைவரும் தண்ணீரை சிக்கனமாகபயன்படுத்தியும், நீர்ப்பங்கீட்டில் நிலைமைக்கேற்ப தண் ணீரை முறை வைத்து பயன் படுத்தவும், நீர்வளத்துறைஅலுவலர்களுடன் ஒத்துழைப்பு நல்கியும், வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்களின் ஆலோசனைகளைப் பெற்று, செம்மை நெல்சாகுபடி உள்ளிட்டதொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குறைந்த பரப்பளவில் மிக

அதிக அளவு மகசூல் பெற்று பயனடைய வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் நீர்வளத் துறைஅமைச்சர்  துரைமுருகன், நகர்ப்புறவளர்ச்சித் துறைஅமைச்சர் கே.என்.நேரு,  மின்சாரம், மதுவிலக்குமற்றும் ஆயத்தீர்வைத் துறைஅமைச்சர்  வி. செந்தில்பாலாஜி, பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சுற்றுலாத்துறைஅமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், நாடாளுமன்றஉறுப்பினர்கள்  எஸ்.ஆர். பார்த்திபன், டாக்டர் பொன். கவுதம் சிகாமணி, டாக்டர் செ. செந்தில்குமார்மற்றும்  .கே.பி. சின்ராஜ், அரசுதலைமைக் கொறடா  கோவி. செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள்  உதயநிதி ஸ்டாலின்,  இரா.இராஜேந்திரன்,  மற்றும்  எஸ். சதாசிவம், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா,  சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர்  செ.கார்மேகம், நீர்வளத் துறையின் முதன்மைதலைமைப் பொறியாளர் இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment