ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 12, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* அமெரிக்க வரலாற்றில் இஸ்லாமியர் ஒருவர் முதன் முறையாக மாவட்ட நீதிபதியாக நியமனம். பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்ட பெற்றோர்க்கு பிறந்த ஜாகீத் குரேஷி, அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாவட்டத்தின் முதல் அமெரிக்க-இஸ்லாமிய நீதிபதியாக நியமனம் செய்ய அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது.

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* .பி. மாநிலத்தை இரண்டாக பிரிப்பது குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, .பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்.

* தமிழக முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக பிரதமர் மோடியை ஜூன் 17இல் டில்லியில் சந்திக்கிறார் முதலமைச்சர் மு..ஸ்டாலின். நீட் தேர்வு விவகாரம், தடுப்பூசி தட்டுப்பாடு, நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

 தி டெலிகிராப்:

* மேற்கு வங்கத்தில் பாஜக தேசிய துணைத் தலைவர் முகுல் ராய் திரிணாமுலுக்குத் திரும்புவது மோடி ஆட்சிக்கு எதிராக ஒரு தேசிய வேகத்தை உருவாக்கும் முயற்சியை  குறிப்பதாக அரசியல் ஆய் வாளர்கள் கருதுகின்றனர்.

* எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்டவற்றில் மருத்துவப் படிப்பிற்கானஇனிச்செட்நுழைவுத் தேர்வை ஒரு மாதம் ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

தமிழ் நாட்டில் மாணவர்கள் உயர்கல்வியில் மொத்த சேர்க்கை 51.4 விழுக்காடு என அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இந்திய சராசரியான 26 விழுக்காட்டை விட இருமடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment