மம்தாவிற்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் மத்திய அரசு முன்னாள் தலைமைச் செயலாளருக்கு விளக்க அறிக்கை அனுப்பியது

புதுடில்லி, ஜூன் 5- புயல் குறித்த பிரதமரின் ஆலோசனைக் கூட் டத்தைப் புறக்கணித்த மேற்கு வங்க மாநில முன்னாள் தலைமைச் செயலருக்கு மத்திய அரசு  விளக்க அறிக்கை அனுப்பியுள்ளது.

யாஸ் புயல் மற்றும் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்க ளில்  விமானம் மூலம் புயல் பாதிப்புகளைப் பிரதமர் நேரடி யாகக் கண்டறிந்த பிறகு மேற்கு வங்க முதல்வர் மற்றும் அதிகாரி கள் பங்கு பெறும் கூட்டத் துக்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

கூட்டத்தில் பங்குபெற மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க் கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி அழைக்கப்பட்டு இருந்ததால் ஆத்திரமடைந்த மம்தா  கூட்டத்திற்கு அரைமணி நேரம் தாமதமாக வந்ததாகவும் அவருக் காக வும் அதிகாரிகளுக்காகவும் பிரதமர் மோடி மற்றும் ஆளுநர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் அரை மணி நேரம் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.  கூட்டத்துக்கு மம்தா மட்டுமின்றி மேற்கு வங்க மாநில அதிகாரிகளும் தாமத மாகவே வந்தனர்.

அப்போது மம்தா   கூட்டத்தில் பங்கேற்காமல் தனியாகப் பிரத மரை 15 நிமி டங்கள் மட்டும் சந்தித்துப் பேசி விட்டு ஆலோ சனைக் கூட்டத்தை விட்டு வெளி யேறினார். இதைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத் தலைமைச் செயலரை திரும்பப் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேற்கு வங்க மாநிலத் தலைமைச் செயலர் அலபன் பண்டோ பாத் யாயாவை உடனடியாக பணி யாளர் பயிற்சி துறைக்கு மே 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக் குமாறு உத்தரவிட்டது.

அவரை அனுப்பி வைக்க முடி யாது என முதல்வர் மம்தா  மறுத்து விட்டார். இதற்கு இடையே அவர் நேற்று முன் தினம் ஓய்வு பெற்றார்.  அவருக்கு மத்திய அரசு தாக்கீது அனுப்பி யுள்ளது.

ஆயினும் அவரை அடுத்த 3 ஆண்டுகளுக்கு முதல்வரின் ஆலோசகராக நியமித்து முதல் வர் மம்தா அதிரடியாக உத்தர விட்டார்.  இது மத்திய பாஜக அரசுக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்தது.

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image