தமிழினத்தலைவர் கலைஞர் பிறந்தநாள்-பன்னாட்டுக் கவியரங்கம்

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராய் என்றும் விளங்கும் கலைஞர் அவர்களின் 98ஆம் பிறந்தநாளை முன்னிட்டுஉலகம் போற்றும்  உயர்பெருந்தலைவர்-கலைஞர்என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கவியரங்கம் 2..6.2021 அன்று மாலை நடைபெற்றது.இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழவேள் இலக்கிய மய்யம் எனும் இரு அமைப்புகளும் இணைந்து நடத்திய இந்த வலையரங்க நிகழ்ச்சியைத் தமிழவேள் உமா மகேசுவரனாரின் வழிமரபுப் பேரன்  அரிமா .கு. திவாகரன் பேராசிரியர் இலக்குவனாரின் மகன் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் ஆகிய இருவரும் பொறுப்பேற்று நடத்தினர்.

அழ.பகீரதன் - இலங்கை, .இராசகுமாரன் - அயர்லாந்து, பெஞ்சமின் லெபோ - பிரான்சு, கால்டுவெல் வேள்நம்பி - அமெரிக்கா, மறைமலை இலக்குவனார் - சென்னை, பாரி முடியரசன் - காரைக் குடி, முரசு நெடுமாறன் - மலேசியா,  பிச்சினிக்காடு இளங்கோ - சிங்கப்பூர், காந்தி சுப்பு ஆறுமுகம் - பெங்களூரு எனப் பல்வேறு நாடுகளிலிருந்து தமிழினத் தலைவர் கலைஞருக்குப் பாமாலை வழங்கினர். பேராசிரியர் மறைமலை இலக்குவனார் தலைமைதாங்கி நடத்தினார். அரிமா .கு.திவாகரன் ஒருங்கிணைத்து நடத்தினார். இந்நிகழ்ச்சியின் நிறைவில் பேராசிரியர் கண.சிற்சபேசன் அவர்கள் பன்னாட்டுக் கவிஞர்களைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். 2.6.2021 மாலை ஏழு மணிமுதல் ஒன்பது மணி வரை நிகழ்ந்த இந்தப் பன்னாட்டுக் கவியரங்கத்தை உலகத்தின் பல்வேறு நாடுகளிலிருந்தும் புலம்பெயர் தமிழர்கள் இணையத் தின் வழி கண்டு மகிழ்ந்தனர்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image