ரயில்-விமான நிலையங்களுக்கு செல்ல இ-பதிவு கட்டாயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 1, 2021

ரயில்-விமான நிலையங்களுக்கு செல்ல இ-பதிவு கட்டாயம்

சென்னை, ஜூன் 1 ஜூன் 7ஆம் தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில், விமான நிலையங்களுக்கு செல்ல -பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, முதற்கட்ட தளர்வில்லா ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதில் விமான-ரயில் நிலையங்களுக்கு செல்வோர் -பதிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

வீடுகளில் இருந்து ரயில்-விமான நிலையம் செல்வோரும், அங்கிருந்து மறுபடியும் வீடுகளுக்கு செல்வோரும் கட்டாயம் -பதிவு பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக பயணச்சீட்டு மற்றும் அடையாள அட்டையுடன் கூடிய -பதிவு கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நடைமுறை இன்று (1.6.2021) முதல் 2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு காலத்திலும் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமலான முழு ஊரடங்கை ஜூன் 7ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு..ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த ஊரடங்கு காலத்தில் சில செயல்பாடுகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளும், சிலவற்றுக்கு தளர்வுகளும் அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

வரி வருவாயை வழங்குவதில்பாரபட்சம் காட்டுவதை வன்மையாகக்

கண்டிக்கிறேன் - கே.எஸ்.அழகிரி

சென்னை, ஜூன் 1 மாநிலங்களுக்குச் சேரவேண்டிய வரி வருவாயை வழங்குவதில் மத்திய பாஜக அரசு பாரபட்சம் காட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று (31.5.2021) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு ரூ.12,000 கோடி வரை நிலுவைத்தொகை வரவேண்டியுள்ளது. மாநிலங்களின் வரி வருவாய் ஆண்டுதோறும் 14 சதவிகிதம் வளர்ச்சிக்கு மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. இந்த உத்தரவாதம் வருகிற 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தோடு முடியப்போகிறது.

இதை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும் என்ற மாநில அரசுகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்பதற்குத் தயாராக இல்லை. இத்தகைய போக்கு காரணமாக ஜிஎஸ்டியின் கட்டமைப்பே சிதைந்து சின்னாபின்னமாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மாநிலங்களின் கோரிக்கையைப் பரிவுடன் கவனிக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் தயாராக இல்லை. இதனால்தான் 7 பாஜக அல்லாத மாநிலங்களில் ஆட்சி செய்கிற நிதியமைச்சர்கள் தனியாகக் கூடி வருவாய் இழப்பீட்டுக் காலத்தை 5 ஆண்டுகளுக்கு மேலும் நீடிக்க வேண்டும், கரோனா தொற்று நிவாரணப் பொருள்களுக்கு பூஜ்ய வரி விதிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால், இவற்றை மத்திய நிதியமைச்சர் கவனிக்கத் தயாராக இல்லை. கொடிய கரோனா தொற்றுக் காலத்தில் கூட வரிவருவாயை விட்டுக்கொடுக்க மத்திய அரசு முன்வரவில்லை.

எனவே, மத்திய பாஜக அரசு மாநிலங்களின் நிதி சுதந்திரத்தைப் பறிக்க முயற்சி செய்கிறது. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துவதில் பல்வேறு காரணங்களைக் கூறி காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் மாநிலங்களின் வரி வருவாய் குறைந்து கரோனா தொற்று போன்ற பேரிடர்க் காலங்களில் அவற்றை எதிர்கொள்வதில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கிற வகையில் மாநிலங்களுக்குச் சேரவேண்டிய வரி வருவாயை வழங்குவதில் மத்திய பாஜக அரசு பாரபட்சம் காட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தகைய போக்கு நீடிக்குமேயானால் கூட்டாட்சிக் கொள்கையே கடுமையான பாதிப்புக்குள்ளாக நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்’.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment