குழந்தைத் திருமணம் செய்வோர், ஊக்குவிப்போர், கலந்துகொள்வோர் மீது சட்ட நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 1, 2021

குழந்தைத் திருமணம் செய்வோர், ஊக்குவிப்போர், கலந்துகொள்வோர் மீது சட்ட நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை

சென்னை, ஜூன் 1 குழந்தைத் திருமணத்தை நடத்துபவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள், குழந்தைத் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் எச்சரித்து உள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று (21.5.2021) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோவிட்-19  இரண் டாம் அலையின் தாக்கத் தின் காரணமாக குழந் தைத் திருமணங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டும், தீவிரமாகக் கண்காணிக்கும் பொருட் டும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அனைத்து மாவட்ட சமூக நல அலுவ லர்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் சைல்டு லைன் 1098 அலு வலர்களுடன் ஆலோச னைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற் றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் நடை பெறாமல் தடுப்பதற்கும் அதுகுறித்துப் பொதுமக் களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் குழந்தைத் திருமணத் தைத் தடுக்க சம்பந்தப் பட்ட காவல்துறை, வரு வாய்த்துறை மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து சமூக பாது காப்புத் துறையும், சமூக நலத்துறையில் எடுக்கப் பட வேண்டிய நடவடிக் கைகள் குறித்தும் ஆலோ சித்து அறிவுரைகள் வழங் கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச் சர் கீதாஜீவன், குழந்தை கள் திருமணம் மற்றும் அந்தக் குழந்தைகள் திரு மணத்தில் கலந்து கொள் வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரித்தார். குழந்தைத் திருமணத்தை நடத்துபவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள், இத் தகைய குழந்தைத் திரு மணத்தில் கலந்து கொள் பவர்கள் மீதும் கடுமை யான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார்.

இக்கூட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் முதன் மைச் செயலாளர் சம்பு கல்லோலிகர், சமூக நல ஆணையர் ஆபிரகாம், சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் லால்வேனா ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சித் திட்ட இயக்குநர் கவிதாராமு மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment