வீட்டில் யாருக்கேனும் தொற்று இருந்தால் அரசு ஊழியர்களுக்கு 15 நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 11, 2021

வீட்டில் யாருக்கேனும் தொற்று இருந்தால் அரசு ஊழியர்களுக்கு 15 நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு

 புதுடில்லி. ஜூன், 11- கரோனா தொற்று காலத் தில் அரசு, ஊழியர்களுக்கு பல வித நிவாரணங்களை ஒன்றிய அரசு அளித்து வருகிறது. அந்த வகையில் பணியாளர்கள், பொது குறைகள் மற்றும் ஓய் வூதிய அமைச்சகம் அளித் துள்ள ஒரு உத்தரவில் மத்திய அரசு ஊழியர் களுக்கு ஒரு மிகப் பெரிய நிவாரணம் கிடைத்துள் ளது. ஒன்றிய அரசு ஊழியர்களின் பெற்றோ ருக்கோ அல்லது அவ ரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கோ கரோனா தொற்று நோய் ஏற்பட்டால், அந்த ஊழியர்கள் 15 நாட்களுக் கான சிறப்பு நேர்வு விடுப் பைப் பெற முடியும்.

சிறப்பு விடுப்பு காலா வதியான 15 நாட்களுக்குப் பிறகும் குடும்ப உறுப்பி னர்கள் / பெற்றோர்கள் எவரேனும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட் டால், அவர்கள் மருத்துவ மனையிலிருந்து வெளி வரும் வரை அரசு ஊழி யர்களுக்கு 15 நாட்களுக் கான எஸ்சிஎல்-அய்த் தாண்டி எந்தவொரு வகையான விடுமுறையும் அனுமதிக்கப்படலாம்.” என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங் களைக் கருத்தில் கொண் டும், இது குறித்து பல வித சந்தேகங்களும் கேள்விக ளும் வந்ததைத் தொடர்ந் தும், கரோனா தொற்று நோய்களின் போது சிகிச்சை, மருத்துவமனை யில் அனுமதி, தனிமைப் படுத்தப்பட்ட காலம் குறித்த விரிவான உத்த ரவை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஒரு அரசு ஊழியர் கரோனா தொற்றுக்கு நேர்மறையாக சோதிக்கப் பட்டு அவர் வீட்டு தனி மைப்படுத்தலில் இருக் கும்போது அவருக்கு 20 நாட்கள் வரை கம்யூட் டட் விடுப்பு வழங்கப்படும் என்று உத்தரவில் கூறப் பட்டுள்ளது.

ஒரு அரசு ஊழியர் கரோனா நேர்மறையாக பரிசோதிக்கப்பட்டு, வீட்டில் தனிமையில் இருந்தால் பின்னர் மருத் துவமனையிலும் சேர்க் கப்பட்டிருந்தால், அவ ருக்கு, தொற்று உறுதி யான நாளிலிருந்து 20 நாட்கள் வரை ஒரு காலத் திற்கு பயண விடுப்பு / எஸ் சிஎல் / ஈட்டிய விடுப்பு வழங்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.

ஊழியருக்கு தொற்று உறுதியாகி 20ஆவது நாளுக்கு அப்பால் மருத் துவமனையில் இருந்தால், மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டதற்கான ஆவண ஆதாரங்களை காண்பித்த பின்னர் அவருக்கு பயண விடுப்பு வழங்கப்படும்என்று அனைத்து ஒன்றிய அரசு அமைச்சகங்களுக்கும் வழங்கப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

No comments:

Post a Comment