சாமியார் அரசில் தலைமைச்செயலாளராக இருந்தவர் தேர்தல் ஆணையராக நியமனம்

 புதுடில்லி. ஜூன் 11- அடுத்த ஆண்டு நடைபெறும் உத் தரப் பிரதேச தேர்தலை மனதில் கொண்டு ஆர். எஸ்.எஸ் ஆதரவாளரும் உத்தரப் பிரதேச தலை மைச் செயலாளராக இருந்தவரை தேர்தல் ஆணையராக மோடி அரசின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலை வர் நியமனம் செய்துள் ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தில்  மொத்தம் 3 ஆணையர்களை நியமிப்  பது வழக்கமாகும்.  இவர்களில் ஒருவர் தலை மைத் தேர்தல் ஆணை யராக இயங்குவார்.  தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக சுசில் சந் திரா பதவி வகித்து வரு கிறார்.

மற்ற இரு ஆணையர் களில் ஓர் ஆணையராக ராஜிவ் குமார் பதவி வகித்து வருகிறார்.   கடந்த ஏப்ரல் மாதம் முதல் மற்றொரு ஆணையர் பதவி காலியாக உள்ளது.  இந்த காலி இடத்துக்கு உத்தரப் பிரதேச முன் னாள் அய்ஏஎஸ் அதி காரி அனூப் சந்திர பாண் டேவை குடியரசுத்தலை வர் நியமித்துள்ளார்.

இரவு சட்ட அமைச் சகம் வெளியிட்ட அறிக் கையில், ”உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து 1984 ஆம் ஆண்டு அய் எஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர் அனூப் சந்திர பாண்டே. இவர் புதிய தேர்தல் ஆணைய ராக நியமிக்கப்படுகிறார்எனக் கூறப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த 5 சட்டமன்ற தேர்தலில் அசாம் மற்றும் புதுச் சேரியில் ஆட்சியைப் பிடித்திருந்தாலும் மேற்கு வங்கம் கேரளா தமிழ்நாட்டில் ஏற்பட்ட பின்னடைவு மோடிக்கு தனிப்பட்ட முறையில் பெரும் பாதிப்பை ஏற் படுத்தி உள்ளது, முக்கிய மாக மேற்குவங்கத்தில் தொங்கு சட்டசபை அல்லது ஆட்சியைப் பிடித்துவிடுவோம் என்று உறுதியாக இருந்த மோடிக்கு அங்கு மம்தா முன்னைவிட அதிக இடங்களைப் பெற்றது மோடி அமித்ஷாவிற்கு பெரும் அதிர்ச்சி மற்றும் கோபத்தை ஏற்படுத்தில் உள்ளது. உத்தரப் பிர தேசத்தில் இது போன்று நடந்துவிடக்கூடாது அங்கு கடந்த முறையை விட அதிக இடங்களைப் பெற்று இழந்த செல் வாக்கை நிலைநாட்ட வேண்டும் என்று பேராசை மோடியின் உள்ளத்தில் ஓடுகிறது, கரோனா தொற்று காலத் தில்  மக்களின் நலனுக் கான முன்கூட்டியே திட் டமிடாததால் ஆயிரக் கணக்கான உயிர்கள் இரண்டாம் அலை யில் காவுகொண்டது,  ஆனால் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் நடக் கும் உத்திரப்பிரதேச தேர்தலுக்கு இப்போதே வேலையைத் துவங்கி விட்டார்கள் இவர்கள் மக்களுக்கான அரசை நடத்தவில்லை, தேர்த லில் வெற்றி பெற்று ஆட் சியைப் பிடித்து அதன் மூலம் கொள்ளை அடிக் கும் திட்டத்தை தான் போடுகிறார்  என்று அர சியல் விமர்சகர்கள்  பாஜக தலைமையை விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image