கழகப் பொறுப்பாளர்களுக்கு ஓர் அன்பான முக்கிய வேண்டுகோள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 11, 2021

கழகப் பொறுப்பாளர்களுக்கு ஓர் அன்பான முக்கிய வேண்டுகோள்!

கரோனா கொடுந் தொற்று மிக அதிரடியாகப் பரவும் இந்த ஊரடங்கு கால கட்டத்தில், நமது இயக்கப் பிரச்சாரப் பணிகள் முடங்கி விடக் கூடாது; இதற்கு ஓர் எளிய வழி என்ன தெரியுமா?

நமது முக்கிய பொறுப்பாளர்கள் அன்றாடக் கடமைகளில் ஒன்றாக தினசரி 'விடுதலை' நாளேட்டை  றிஞிதி மூலம் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், அறிமுகமானோருக்குத் தவறாமல் அனுப்பிக் கொண்டே இருப்பதை முதற் கடமையாகச் செய்யுங்கள்.

இதற்கென ஒவ்வொரு பொறுப்பாளரும் நாளின் ஒரு பகுதியைச் செலவிட்டு, அனுப்பப்படுவோரைத் தொடர்புகொண்டு  'திமீமீபீ ஙிணீநீளீ' கிடைத்ததா? படித்தீர்களா?' என்று கேட்டு ஊக்கமுடன் பணிகளில் தொய்வின்றி ஈடுபட வேண்டும்.

இப்பணிக்கென கண்காணிப்புக்கும், ஒருங் கிணைப்புக்குமான கீழ்க்கண்ட "முயற்சித் திருவினையாக்கும் குழு" அமைக்கப்படுகிறது.

1. வீ. அன்புராஜ் (பொதுச் செயலாளர்,

     தலைமை ஒருங்கிணைப்பு)

2. துரை. சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்)

3. தஞ்சை இரா. ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்)

4. உரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில அமைப்பாளர்)

5. மதுரை வே. செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்)

6. ஊமை ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்)

7. வி. பன்னீர்செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்)

8. ஈரோடு . சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்)

9.  தி. என்னாரெசு பிராட்லா (கழகப் பேச்சாளர்)

ஒவ்வொரு நாளும் எத்தனைப் பேருக்கு அனுப்பினோம் என்ற விவரங்களை தலை மைக்கு உடனுக்குடன் அனுப்பிப் பதிவு செய்ய வேண்டும்.

இம்முறை மூலம் ழிமீtஷ்ஷீக்ஷீளீ  போல அனைத்துப் பொறுப்பாளர்களும்ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் 20 முதல் 50 பேர் வரை நண்பர் களுக்கோ, உறவினர்களுக்கோ, தெரிந்த வருக்கோ 'விடுதலை'யை அனுப்பி, 'விடுதலை'யின் வாசிப்பை சுவாசமாக்கிட வேண்டும்.

இது நமது இனத்தின் உரிமை காக்கும் உயிர் மூச்சுக்காற்று  என்று உணர வைக்கும் உயரிய பணி என்று 'முயற்சித் திருவினையாக்கும்' இலக்கை வெற்றியாக்கிக் காட்ட வேண்டும்.

விரைந்துசெய்க! வெற்றி தருக!!

 கி.வீரமணி

 தலைவர்

சென்னை    

திராவிடர் கழகம்

 11.5.2021            

குறிப்பு: சந்தாக்கள் சேர்ப்பதும் தொடர்ந்து நடை பெறுதல் அவசியம்! அவசியம்!! 

No comments:

Post a Comment