'இந்து' ஏட்டிலிருந்து

கரோனாவில் சிக்கிக் கொண்ட இந்திய அரசு

செயல்பாட்டுக்காக குறிப்பிடப்பட்டுள்ள கால இலக்கை தவற விடுவதை விட,  பா... ஆட்சிக்கு தலைப்புச் செய்திகளில் இடம் பெறுவதுதான் முக்கியமானதாக இருக்கிறது.

சோனியா காந்தி

 கேள்விஉண்மை நிலவரத்தை மறைப்பதற்காக கோவிட்-19 தொடர்பான தவறான புள்ளி விவரங்களை  அரசு அளிப்பது பற்றிய குற்றச்சாட்டுகள் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்.

பதில்:  நாம் நம்பவேண்டும் என்று அரசு விரும்பும்  நிலையை விட கோவிட்-19 நோய் பாதிப்பு இறப்பு தொடர்பான உண்மையான நிலை மிகமிக மோசமான அளவிலேயே இருப்பது மிகவும் வெளிப்படையாக இப்போது தெரிந்துவிட்டது என்று நான் கருதுகிறேன். இதனை நான் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் கூறுகிறேன். உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மாநிலங்களைப் பொறுத்தவரை இத்தகைய புள்ளி விவரங்கள் அளவுக்கு அதிகமாகவே மாற்றி அளிக்கப்படுகின்றன. ஊடகத்தில் உள்ள பலராலும் இது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் மோடி அரசாங்கம், கவலையுடன் கூடிய, மகிழ்ச்சியற்ற, மனநிறைவற்ற பொதுவானதொரு உணர்வினால் துன்புற்று வரும் ஒரு பிரச்சி னையையோ அல்லது ஒரு கேடான சூழ் நிலையையோ காட்டுவதன்  அடையாளமே இது.

ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை மோசமாக சித்தரிக்கும், ஆளுங்கட்சிக்கு  சங்கடம்  தரும் உண் மைகளை மறைத்துவிடுவது, புள்ளி விவரங்களைத் திரித்து வெளியிட்டுவிட்டு, தங்களது பரப்புரைக்கு மக்கள் கவனத்தை ஈர்ப்பது போன்ற கட்டுப்பாடுகளை வைத்திருப்பது என்பதே ஆளும் பா...வின் தந்திர மாகும்.  பா... ஆட்சியைப் பொருத்தவரை, செயல்பாடுகளுக்கான இலக்கு களை எட்டுவதை விட, பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளில் இடம் பெறாமல் போய்விடுவது என்பது தவிர்க்கப்பட வேண்டிய  மிகவும் முக்கியமான விஷயமாகும்.

 கேள்வி:  கோவிட்-19 நோயின் இரண்டாவது அலையை மோடி அரசு  கையாண்ட விதமே மிகப் பெரிய அளவிலான சீரழிவாக இருந்தது என்று அண்மையில் நீங்கள் கூறியிருக்கிறீர்கள். ஆனால், அரசு எந்த வேலையைச் செய்தாலும் எதிர்கட்சி என்ற முறையில் நீங்கள் குறை கூறிக் கொண்டே இருக்கி றீர்கள் அல்லவா? கடுமையான ஊரடங்கு சட்டத்தை பிரகடனப் படுத்தியதன் மூலம் மக்கள் மீது மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி, நாட்டின் பொருளா தாரத்தையே மோடி அரசு சீரழித்துவிட்டது என்று கடந்த ஆண்டு நீங்கள் கண்டனம் தெரிவித்திருந்தீர்கள். கோவிட்-19 தொற்று நோயை எதிர்கொள்ள வேண்டிய அனைத்துப் பணிகளையும், பொறுப்புகளையும்  இப்போது மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டிருப்பதை நீங்கள் குறை கூறுகிறீர்கள். இதில் அரசியல் கருத்தொற்றுமை என்பது எங்கிருந்து வருகிறது?

பதில்:  ஒரு சில விவரங்களை சுட்டிக் காட்ட நான் விரும்புகிறேன். எதிர்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநில அரசுகள் மீது பாகுபாடுகளைக் காட்டியதன் மூலம் தொடர்ந்து இதனை ஒரு அரசியல் விளை யாட்டாக பா... மத்திய அரசுதான் தொடர்ந்து விளையாடி வருகிறது. கோவிட்-19 எதிர்ப்பு தொடர்பான அனைத்து விஷயங்களையும் தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்ததே மத்திய அரசுதான். நோய் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலை மேம்படும்போது, அதற்கான பெருமையை பா... அரசு எடுத்துக் கொள்கிறது. செயல்பாடுகள் தவறாகிப் போகும்போது, மாநிலங்களை மத்திய அரசு குறை கூறுகிறது. தடுப்பூசி விவகாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் விலை பற்றி மத்திய அரசு எப்போதாவது மாநில அரசு களுடன் பேசியுள்ளதா? இல்லையே!  உண்மையைக் கூறுவ தானால், மருந்தின் விலை நிர்ணயிப்பது என்ற ஒட்டு மொத்த பிரச்சினையுமே அர்த்தம் அற்றது. பொது சுகாதாரத் தொழிலில் உள்ள வல்லுநர்களின் கடுமையான கண்டனத்திற்கு அது உள்ளாகியுள்ளது. தடுப்பூசி போடுவது என்ற ஒட்டு மொத்த செயல்பாட்டு திட் டத்தையே சற்றும் இரக்கமோ, சோர்வோ இல்லாமல் பிரதமர் அரசியலாக்கி வருகிறார். கருத்தொற்றுமை எட்டுவதற்கு நாணயமான கலந்துரையாடல்களும், பிறர் பேசுவதை பொறுமையுடன் கேட்பதற்கு இயன்ற ஆற்றலும் தேவை என்பதுடன், தனக்குத்தான் அனைத்தும் தெரியும் என்றும், எங்கள் வழி மட்டுமே நாட்டுக்கு இருக்கும் ஒரே வழி என்றும் ஊகித்துரைத்து வலியுறுத்தக் கூடாது.

கேள்வி:   தடுப்பூசி போடுவது பற்றி அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள  புதிய கொள்கையை நீங்கள் கண்டித்துள்ளீர்கள். தங்கள் உற்பத்தித் திறனைப் பெருக்கி நாட்டின் தேவையை நிறைவு செய்ய இயன்ற அளவில் தடுப்பூசி மருந்து தயாரிப்பவர் களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் அதற்குப் பொருத்தமான விலை அளிக்கப்பட வேண்டாம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்:  நல்லது. பொது மக்களின் கண்ணோட் டத்தில் இருந்து இதனை நாம் பார்க்க வேண்டும். தடுப்பூசி தயாரிப்பாளர்களுக்கு அவர்களின் மருந்து தயாரிப்பின் செலவு ஈடுகட்டப்படவேண்டும் என்பதும்  அவர்களுக்கு நியாயமான லாபம் கிடைக்க வேண்டும் என்பதும் உண்மைதான். மற்ற நாட்டு அரசுகள் செய்தது போல, தடுப்பூசி தயாரிப்பதற்கு வசதிகளை செய்து கொடுத்ததுடன், தங்களது தேவைக்கான தடுப்பூசி மருந்துக்கு முன்னதாக வினியோக ஆணைகளை வழங்கி தடுப்பூசி வழங்கும் சங்கலித் தொடரை மோடி அரசு பலப்படுத்தியதா? 2021 ஜனவரி மாத இறுதி வரை மோடி அரசு வினியோக ஆணைகளை வழங்கவில்லை. அவ்வாறு ஆணைகள் வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக் கையைத் தேவையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மிகமிகக் குறைவாக இருந்தது.

தகுதியுள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் இரண்டு டோஸ் மருந்து போடப்பட வேண்டும் என்றால்,  200 கோடி தடுப்பூசி நமக்கு வேண்டும் ; அதுவும் மிகமிக அவசரமாக வேண்டும். இந்த கோவிட்-19 தொற்று நோய்க்கு  சிகிச்சை அளிப்பதில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கவேண்டும் என்றும், மருந்து தயாரிப்பாளர்களுடன் பேசிய பிறகு  தேவைப்படும் தடுப்பூசிகளைப் பெற்றுத் தருவ தற்கான பொறுப்பை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் எங்கள் கட்சி நம்புகிறது. அதற்கு மாறாக அவர்கள்  தடுப்பூசி மருந்துக்கு பல் வேறுபட்ட விலைகளை நிர்ணயம் செய்வதன் மூலம் தயாரிப் பாளர்கள் அதிக லாபம் பெறுவதற்கு ஊக்குவிக்கும் ஒரு திட்ட நடைமுறையை உருவாக்கியுள்ளனர்.  உண்மையைக் கூறுவ தானால், 18 வயது முதல் 45 வயது வரை யிலான இளைஞர்களுக்கு தடுப்பூசி போடும் பொறுப்பை மத்திய அரசு முற்றிலுமாக கை விட்டு விட்டது போலவே தோன்றுகிறது. தங்களது தடுப்பூசி மருந்துகளுக்காக இந்த இளைஞர்கள் அதிக விலை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்வி:  ஒரு தேசிய முயற்சி தேவைப்படும் மிகமிக முக்கியமானதொரு பணி என்னவென்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்:  அய்யத்திற்கு சற்றும் இடமின்றி, தடுப்பூசி போடுவதுதான் மிகமிக முக்கியமான தேசிய பணி என்றுதான் இக்கேள்விக்கு பதில் கூறவேண்டும். கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய அரசால் நிர்ணயிக் கப்பட்ட  10%  இலக்கை விடக்குறைவாகவே தடுப்பூசி போடும் இப்பணி எட்டியுள்ளது. இரண்டு டோஸ் மருந் தையும் எடுத்துக் கொண்டவர்களைப் பற்றிதான் நான் குறிப்பிடுகிறேன். அதன் இலக்கே 30 கோடியாகும். இப்போது சேர்க்கப்பட வேண்டிய 18 முதல் 45 வரையிலான இளைஞர்களையும் சேர்த்தால் நமது தேவை 30 கோடியை விட மிக அதிக அளவில் இருக்கும். தடுப்பூசி மருந்து வினியோகத்தை உயர்த் துவதும் மற்றும் தடுப்பூசி மருந்தின் விலையை ஒழுங்குபடுத்துவதும் மிகமிக முக்கியமான பணி களாகும். இது ஒரு மாபெரும் கூட்டு முயற்சியாக இருக்க வேண்டும். தடுப்பூசி மருந்தின் கையிருப்பை  அதிகப்படுத்து வதற்கு, கட்டாய உரிமம் வழங்கும் திட்டத்தை இந்தியா நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மன்மோகன்சிங் தெரிவித்துள்ள ஆலோசனை மேலும் தாமதமின்றி செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை இப்போதும் கூட நான் கூறுவேன். இதற்கான பெருமையை வேண்டுமானால், பிரதமரே எடுத்துக் கொள்ளட்டும். அவ்வாறு எடுத்துக் கொள்வது ஒன்றும் புதிதல்ல. குறைந்தபட்சம் இது பற்றி அவர் செயல்படட்டும்.

(நிறைவு)

நன்றி: 'தி இந்து' 30-04-2021

                                தமிழில்: .. பாலகிருட்டிணன்

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image