தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு குவியும் வாழ்த்துகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 3, 2021

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு குவியும் வாழ்த்துகள்

 பிரதமர் மோடி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

புதுடில்லி, மே 3-- தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட் டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக் கிறது. திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களுக்கு பிரத மர் மோடி, காங்கிரசு கட்சி மேனாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட நாடுதழுவிய அளவில் தலைவர்கள் பலர்  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி: சட்டப் பேர வைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மு..ஸ்டாலின், அறிவாலயத்துக்கு வாழ்த்துக்கள். தேச நலன், கரோனா தொற்றை எதிர்கொள்வதிலும் பிராந்திய வளர்ச்சியை மேம்படுத் தவும் இணைந்து செயல்படுவோம்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி: சட்டப்பேரவை தேர் தலில் அமோக வெற்றி பெற்றதற்காக வாழ்த்துகள். தமிழகமக்கள் ஆட்சி மாற்றத்துக்கு வாக்களித்துள்ளனர். அந்தப் பாதையில் நம்பிக்கையோடு உங்களின் சீரிய தலைமையின்கீழ் பயணம் செய்வோம் என்பதை நாம் நிரூபிப்போம்.

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்: சட்டப்பேரவை தேர் தலில் பெற்றுள்ள பிரம்மாண்ட மான வெற்றிக்கு வாழ்த்துகள், தங்களின் தந்தை கலைஞரின் சமூக நீதிக் கொள்கையை தாங்களும் முன்னெடுத்துச் செல்வீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்: சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்கு கட்சியின் தலைவர் மு..ஸ்டாலினுக்கு வாழ்த் துகள்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா: மு..ஸ்டாலின், மம்தா, பினராயி விஜயன் ஆகியோருக்கு அவர்களின் கட்சிகள் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள். மக்கள் நலனை முன்னிறுத்தி மத்திய அரசுடன் மாநில அரசுகள் தோளோடு தோள் கொடுத்து பணி யாற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார்: உண்மையிலேயே இந்த வெற்றிக்கு நீங்கள் தகுதியானவர். உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்களுக்கு சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டில்லிமுதல்வருமான கெஜ்ரிவால்: சட் டப் பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுள்ள மு..ஸ்டாலி னுக்கு வாழ்த்துகள். தமிழக மக்க ளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, வெற்றிகரமாக ஆட்சி நடத்த வாழ்த்துகிறேன்.

பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலை வர் தேஜஸ்வி யாதவ்: சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற் றுள்ள தங்களுக்கும் திமுக மற்றும் கூட்டணி கட்சி செயல் வீரர்களுக் கும் வாழ்த்துகள். உங்களின் திறமை யான தலைமையின்கீழ் செயல்படுத் தப்படும் மக்கள்நலத் திட்டங்களுக் காக தமிழக மக்கள் ஆர்வமாக காத் திருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி: தமிழ்நாட் டின் முதலமைச்சராக பதவியேற் கவுள்ள மு..ஸ்டாலின் அவர் களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

.பன்னீர்செல்வம்: தமிழக முதல்வ ராக பொறுப்பேற்க உள்ள தி.மு.. தலைவர் மு..ஸ்டாலினுக்கு வாழ்த் துக்கள். பொறுப்பை உணர்ந்து அரசின் கடமைகளை முறையாக ஸ்டாலின் ஆற்ற வேண் டும் என்று தெரிவித்துள்ளார்.

திரைக்கலைஞர்ரஜினிகாந்த்: சட்டப் பேரவைத் தேர்தலின் கடும் போட்டியில், திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்திருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மு..ஸ்டாலின், நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத் துடனும் இருந்து, அனைத்துத் தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழ கத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண் டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: அன்புச் சகோதரர் மு.. ஸ்டாலின் தலைமையில் திமுகவின் பொற்கால ஆட்சி மலர்கின்ற நிலை உருவாகி இருப்பதை எண்ணி மகிழ் கிறேன். வெற்றிகள் தொடரட்டும், பணிகள் தொடங்கட்டும், புதிய வரலாறு படைக்கட்டும்.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: கரோனாதொற்று சூழல், கடுமை யான பொருளாதாரநெருக்கடி, வாழ்வாதாரப் பிரச்சினைகள் போன்ற சவால்களை திமுக தலை வர் மு..ஸ்டாலின் தலைமையில் மலரப் போகிற புதிய ஆட்சி மக்கள் ஆதரவோடு நிறைவேற்றுவதற்கு வாழ்த்துகள்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: ஆட்சிப் பொறுப்பை ஏற்கவிருக்கும் திமுக தலைவர் மு..ஸ்டாலினுக்கு நல் வாழ்த்துகள். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக் களித்த தமிழக மக்கள் அனைவருக் கும் நன்றி.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்: பெருவெற்றி பெற் றுள்ள மு..ஸ்டாலினுக்கு மனப் பூர்வமான பாராட்டுகள். நெருக்கடி யான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துகள்.

மனிதநேயமக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா: தமிழகத்தின் அடுத்த முதல்வர் மு..ஸ்டாலினுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். என்னைத் தேர்ந்தெடுத்த பாபநாசம் தொகுதி மக்களுக்கு நன்றி.

முன்னாள் பிரதமர் தேவகவுடா: திமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வந்த தற்காக எனது நண்பரும், உங்களது தந்தையுமான கலைஞர் தங்கள் மீது மதிப்பும், மகிழ்ச்சியும் கொள் வார். திராவிட கொள்கை மற்றும் பாரம்பரியத்தை இன்னும் சிறப் பான உயரத்துக்கு எடுத்துச் சென்று தமிழக மக்களுக்கு முழு அர்ப் பணிப்புடன் பணியாற்றுவீர்கள் என்று நம்புகிறேன். 

கருநாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி: 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைத்து மக்கள் சேவையில் ஈடுபட இருக்கும் திமுக தலைவர் மு..ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள் கிறேன். 

அகிலேஷ் யாதவ்: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் சிறப்பான வெற்றி பெற்றுள்ள மு..ஸ்டாலி னுக்கு வாழ்த்துக்கள்.

மேலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும்,  புதுச்சேரி மேனாள் முதல்வர் வி.நாராயணசாமி, ஜம்மு காஷ்மீர் மேனாள் முதல்வர் உமர் அப்துல்லா   உள்ளிட்ட தலைவர்கள், பல்துறை வல்லுநர்கள் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள னர்.

நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.. எம்.எல்.ஏக்கள் கூட்டம்

சுட்டுரைப் பதிவில் அனை வருக்கும் தளபதி மு..ஸ்டாலின் அவ்வப்போது நன்றியைத் தெரிவித்து வருகிறார்.

சென்னையில் நாளை (4.5.2021) மாலை 6 மணிக்கு தி.மு.எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என தி.மு.பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.எம்.எல்.ஏக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு துரைமுருகன் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment