மறைவு

தந்தை பெரியாரின் பற்றாளரும், ஆரணி தி.மு.. முன்னாள் நகர செயலாளரும் நினைவில் வாழும் கு.முரஅரி அவர்களின் மகன் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் அலுவ லரும், பகுத்தறிவாளரும் கழகத் தலைவர் ஆசிரியர்மீது மிகுந்த பாசம் கொண்டவருமான மு.பாண்டியன் நெடுஞ்செழியன் (வயது 57) உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (3.5.2021) மறை வுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். மறைவுற்ற மு.பாண்டியன் நெடுஞ்செழியன் அவர்கள், வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன் அவர்களின் மைத்துனரும், தமிழ்நாடு பார்மசி கவுன்சிலின் பதிவாளர் முனைவர் மு.தமிழ்மொழி அவர்களின் அண்ணனும் ஆவார். தொடர்புக்கு: 7339114672.

- - - - -

தருமபுரி நகரத் தலைவர்  கரு.பாலன்-விஜயா அவர்களின் மகனும், மாவட்ட இளைஞரணி முன்னாள் செயலாளருமான வி.பா. ஆதவன் வயது (30)  உடல்நலக் குறை வின் காரணமாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட  நிலையில்  சிகிச்சை பலனின்றி நேற்று (3.5.2021) மதியம்  1  மணி அளவில்  மருத்துவமனையில்  மறைவுற்றார்.

மாநில. அமைப்புச்  செயலாளர் ஊமை.ஜெயராமன், மாவட்டத்  தலைவர்  வீ.சிவாஜி, மாவட்ட பகுத்தறிவாளர்  கழக  அமைப்பாளர் கதிர்.செந்தில் ஆகியோர் அவரது உடலுக்கு  மரியாதை செலுத்தினர். கரு. பாலனின் சொந்த ஊரான  சேலம்  மாவட்டம் ஓமலூர்  அருகே  உள்ள  புளியம்பட்டிக்கு உடல்  எடுத்துச்  செல்லப்பட்டு  பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு  மாலை  6 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.

மறைவுற்ற  வி.பா.  ஆதவன் மாணவர் கழகம்,  இளைஞரணி பொறுப்புகளை ஏற்று  சிறப்பாக செயல்பட்டவர். அனைத்து போராட்டங்கள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொண்டவர்.  மகனை  இழந்து வாடும்  பெற்றோர்  கரு.பாலன்- விஜயா, சகோதரர்  அறிவுக்கரசு ஆகியோருக்கு கழகத்  தோழர்கள் ஆறுதல் கூறினர். 

Comments