ஒரே நாடு கொள்கையை ஏற்க மறுத்து வங்கமக்கள் மோடிக்கு புகட்டிய பாடம்

 கொல்கத்தா, மே. 3 - மேற்குவங்க மாநிலத்தில், கணிப்புகளை யும் மீறி, அசுர வெற்றியுடன், மூன்றாவது முறையாக ஆட் சியை தக்கவைத்துள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் தலை வர் மம்தா.

அம்மாநிலத்தில், சுதந்திர காலம் தொடங்கி, 1977ஆம் ஆண்டுவரை, காங்கிரஸ் ஆட்சியே இருந்து வந்தது. பின்னர், 1977ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த கம்யூ னிஸ்ட், கடந்த 2011ஆம் ஆண்டு வரை, மொத்தம் 35 ஆண்டுகாலம் தொடர்ச்சி யாக ஆட்சியில் இருந்தது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து நரசிம்மராவ் காலத்தில் பிரிந்துவந்தமம்தா

வின் திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆதிக்கத்தை அரும்பாடுபட்டு தகர்த்து, 2011ஆம் ஆண்டு 184 இடங் களைப் பெற்று ஆட்சியமைத் தார்.

அப்போது, சில அரசியல் விமர்சகர்கள் இவ்வாறு கூறி னார்கள். “காங்கிரஸ் கோட் டையை தகர்த்த கம்யூ னிஸ்ட்டை 35 ஆண்டுகாலம் சாய்க்க முடியவில்லை. ஆனால், மம்தா இறுதியாக இப்போது வென்று விட்டார். இனி, இவரை வீழ்த்த வேண்டு மானால் குறைந்தது 20 ஆண்டுகாலமாவது ஆகும்என்றனர்.

கடந்த 2016 தேர்தலில் 211 இடங்களை வென்ற மம்தா, தற்போது அதைவிட அதிக மான இடங்களை வென்றுள் ளார். அந்த அரசியல் விமர் சகர்கள் சொன் னது ஒருபக்கம் என்றாலும், இடையில் புகுந்துவிளையாடிய பாஜகவை நாம் இங்கே கட்டாயம் கணக்கில் எடுக்க வேண்டும்.

மோடி - அமித்ஷாவின் பாஜக செய்த அத்தனை தில் லாலங்கடி வேலைகளையும் தாண்டி, மம்தா வென்றுள்ளதானது, அவரின் தனிப்பட்ட சாதனைக்குத் தான் அதிகம் சேருமே ஒழிய, அந்த அரசியல் விமர்சகர்கள் சொன்ன மேற்கு வங்கத்தின் அரசியல் சூழல்களுக்கு அதி கம் சேராது!

மேற்குவங்கத்தைப் பொறுத்தவரை, ஒரு குறிப் பிட்ட கட்சியின் ஆட்சி,

பல தேர்தல்களுக்கு தொடர் வதை நம்மால் காண முடி கிறது.

Comments