பொதுக்குழு என்று சொல்லத்தக்க வகையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 10, 2021

பொதுக்குழு என்று சொல்லத்தக்க வகையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழு

கவிஞர் கலி.பூங்குன்றன்

எத்தனையோ தலைமைச் செயற்குழுக் கூட்டங்களை நடத்தியிருக்கிறோம். நேற்று நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டம் விரிவானது - விவரங் கள் நிறைந்தது - ஒரு பொதுக் குழுவுக்கு இணையானது.

தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அல்லாமல், சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கழக செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், மண்டல, மாவட்ட கழக தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்ற கூட்டமாக அமைந்தது.

32 பேர் தங்களது கருத்துகளை எடுத்துக் கூறினர். காலை 10.30 மணிக்கு தொடங்கப்பட்ட கூட்டம் பிற்பகல் 1.45 வரை நீண்டது.

2020 மார்ச்சுத் திங்களில் கரோனா காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 14 மாதங்களாக கரோனா வோடு போராடிக் கொண்டிருக்கிறோம். இத்தகையதொரு அசாதாரணமான சூழலில் அதிகபட்சமாகக் கழகம் எந்தெந்த வகையில் எல்லாம் செயல்பட முடியுமோ, அந்தந்த வகையில் எல்லாம் அதிகபட்சமாகவே செயல் பட்டு வந்திருக்கிறது.

தேவையான அவசியமான போராட்டங்களையும் கட்டுப்பாடான நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடத்தி யிருக்கிறது.

தோழர்கள் மத்தியிலே இயக்கத் தொடர்பானதும், அமைப்புத் தொடர்பானதும், இயக்க ரீதியானதும், கழக வரலாற்று ரீதியானதும், திராவிட இயக்க சிந்தாந்த தொடர்பானதுமான தலைப்புகளில் கழகத் தலைவர் காணொலி மூலமாக கருத்துகளை விரிவாகக் கூறி வந்திருக்கிறார்.

இயக்கத்துக்கு அப்பாற்பட்ட அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்ட இனம், மொழி, பண்பாடு சார்ந்த காணொலி கருத்தரங்குகளிலும் கலந்து கொண்டு முத்திரை பதித்துள்ளார். பல தொடர் சொற்பொழிவுகளும் நேர்த்தியாக அமைந்திருந்தன.

கழகத் தோழர்களும், கழக அணியினரும் ஆங் காங்கே கருத்து ரீதியாகக் காணொலிகளை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக அரும்பாக்கம் - அண்ணா நகர் அறிவொளி காணொலி நிகழ்ச்சிகள் இருநூறை நெருங் கிக் கொண்டுள்ளன.

தலைமைச் செயற்குழுத் தீர்மானப்படி காணொலி வழி நிகழ்ச்சிகள் இதுவரை நடைபெறாத பகுதிகளிலும் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் - ஏற்கெனவே சிறப்பாக நடைபெறும் காணொலி நிகழ்ச்சிகளும் தொய் வுக்கு இடம் அளிக்காமல் மேலே மேலே தொடர வேண் டும் என்பது முக்கிய வேண்டுகோளாக இருக்கிறது.

போக்குவரத்துப் பாதிக்கப்பட்ட நிலையில்விடுதலை' இணையத்தின் மூலமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது.

அச்சிடப்பட்டவிடுதலை'யைப் படித்தவர்களைவிட இணையவழி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப் பது வியப்புக்குரியது என்பதைவிட நம்பிக்கை அளிப்ப தாகவும் இருக்கிறது.

எதிர்கால உலகம் காகிதங்களைத் துறந்து இணையத் தால் இணைக்கப்படுமோ என்கிற சிந்தனைப் பொறி மின்னலாக அடிக்கிறது.

கழகத் தோழர்களின் உரையில் முக்கியமாக இடம் பெற்றவை:

கரோனா காலகட்டத்திலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலையிலும், கூட ஆபத்துக்கும் தம்மை உட்படுத்திக் கொண்டு  (‘ரிஸ்க்கை'யும் எதிர்கொண்டு) தமிழர் தலைவர் மேற்கொண்ட தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் குறித்து, கூட்டத்தில் பேசிய ஒவ்வொருவருமே கனத்த இதயத்தோடு சுட்டிக் காட்டத் தவறவில்லை.

திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி இல்லை என்றாலும், தேர்தலைப் பற்றிக் கவலைப் படாத பொறுப்பற்ற ஓர் அமைப்பும் அல்ல! "இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?" என்று அலட்சியம் மற்றும் பொறுப்பற்றத் தன்மையோடு நடந்து கொள்ளும்சாய்வு நாற்காலி' - பொதுத் தொண்டுக்குரிய அமைப்பும் அல்ல!

தேர்தலில் யார் வெற்றி பெறக் கூடாது என்பதற்கு முன்னுரிமை கொடுத்து, யாரை ஆட்சியில் அமர்த்துவது என்பதில் கவலையும், பொறுப்பும், விழிப்பும் கொண்டு பணியாற்றும் கடமை எப்பொழுதும் கழகத்திற்கு இருந்து வந்திருக்கிறது.

நீதிக்கட்சிக் காலத்திலேயே தந்தை பெரியார் அவர் கள் நீதிக் கட்சிக்காகத் தேர்தல் பரப்புரை செய்ததுண்டு. சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தல் (1952) முதற்கொண்டு தேர்தல் களத்தில் திரா விடர் கழகத்தின் முத்திரை தனித்தன்மையானது.

1962 தேர்தல் முதல் 1971 தேர்தல் வரை தந்தை பெரியாரோடு சுற்றுப் பயணத்தில் இணைந்து நமது ஆசிரியர் அவர்கள் தொடர்ந்து பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

அந்தக் கடமையையொட்டி இந்தக் கரோனா காலத்துத் தேர்தலிலும் மற்றவற்றையெல்லாம் புறந்தள்ளி, அவரின் தேர்தல் பிரச்சார உரை தனித்தன்மையானதாக செறி வூட்டுவதாகவே இருக்கும்; கழகத் தலைவர் ஒரு சூறா வளிப் பயணத்தை மேற்கொண்டார் - அது நல்ல பல னைத் தந்தது என்பது கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.

இந்த அரும் பெரும் பணியை உணர்ந்த நிலையில்தான் கழகத் தோழர்கள் நேற்றைய கூட்டத்தில் நெகிழ்ச்சியாகவும், உணர்ச்சியாகவும் தங்களின் மனத் திறந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும்.

நடப்பது வெறும் அரசியல் சம்பந்தப்பட்ட தேர்தல் அல்ல - இது ஓர் இனப் போராட்டம் என்று சொல்லி வந்தது எத்தகைய உண்மை என்பது நடைபெற்ற நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்தவர்களும், கணித்தவர் களும் அறிவார்கள்.

பார்ப்பனர் சங்கம் பச்சையாக திமுகவை எதிர்த்துத் தீர்மானம் போட்டன. ‘துக்ளக்', ‘தினமலர்', ‘தினமணி' போன்ற பார்ப்பன ஏடுகள் திமுகவுக்கு எதிராக அவதூறு களையும், பொய்களையும், புனைவுகளையும் வாரி வாரி இறைத்தன.

மத்தியிலே ஆட்சியில் உள்ள அதிகார மய்யம் - மாநிலத்திலே அதன் கைவாளாகச் சுழன்ற அதிகார மய்யம், பணபலம் என்ற இரும்பு உலக்கைகளால் நையப்புடைக்கப்பட்டும், தமிழ்நாட்டு மக்கள் எதிரிகள் விரித்த வியூகங்கள் என்ற வலைக்குள் சிக்கிக் கொள் ளாமல்கடந்த 10 ஆண்டுகள் பட்டது போதுமடா சாமி! ஆளை விடுங்கள்!' என்ற முறையில் திமிர் முறித்து உதய சூரியன் முகத்தில் விழித்து கூட்டணிக் கட்சிகளைத் தேடிச் சென்று ஆதரவு முத்திரையைக் குத்தி, திமுக கூட்டணி கட்சிகளின் வெற்றி எண்ணிக்கைக்குப் பாதி யளவுக்குக்கூட வர முடியாத அளவுக்கு எதிர்க் கட்சி களுக்குத்தண்ணீர் காட்டி' விட்டனர் - இனவுணர்வுள்ள தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்கள்! அவர்களுக்குத் தலைமை செயற்குழுவில் நன்றி கூறும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

(வளரும்)

No comments:

Post a Comment