சோதனை சாவடிகளில் இ-பதிவு இல்லாத வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 18, 2021

சோதனை சாவடிகளில் இ-பதிவு இல்லாத வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

 சென்னை, மே 18 வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிய -பதிவு நடைமுறையால் அனுமதி பெறாத வாகனங்களை காவல் துறையினர் திருப்பி அனுப்பினர். இதனால், நெடுஞ்சாலைகளில் வாகன நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

தமிழகத்தில் மாவட்டங் களுக்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 17.5.2021 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கெனவே வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர் களுக்கு -பதிவு கட்டாயம் என்பது நடைமுறையில் உள்ளது. தற்போது அரசின் புதிய அறிவிப் பால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையான கிறிஸ்டியான் பேட்டை, பொன்னை சோதனைச் சாவடி, பேரணாம் பட்டு அருகே பத்தலபல்லி சோதனைச் சாவடி, பரதராமி, சைன குண்டா சோதனைச்சாவடிகளில் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து -பதிவு சான்று உள்ளதா? என்பதை சரிபார்த்த பிறகே அனுமதிக்கின்றனர். -பதிவு இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.

அதேபோல், அரசின் புதிய நடைமுறையை தொடர்ந்து வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட எல்லைகளில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கை யில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, வேலூர் மாவட்ட எல்லையான கண்ணமங்கலம், பிள்ளையார் குப்பம், மாதனூர், பேரணாம்பட்டு ஆகிய இடங்களில் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து சோதனை செய்து வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொன்னியம்மன் பட்டறை சோதனைச்சாவடி, பேரம்பாக்கம் சோதனைச்சாவடி, திருவாலங்காடு சாலை சோதனைச்சாவடி, திருத்தணி சாலை, சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகளை ஏற்படுத்தி தணிக்கை யில் ஈடுபட்டனர்.

-பதிவில் திருமணம், இறப்பு போன்றவற்றிற்கு -பதிவு செய்தவர்கள் மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டது. ஆனால், திடீரென -பதிவில் இருந்து திருமணம் என்ற காரணத்தை  காட்டி நிறைய பேர் விண்ணப்பித்ததால் இதை பட்டியலில் இருந்து நீக்கினர். பின்னர் பொதுமக்களின் வேண்டு கோளினை ஏற்று இன்று மீண்டும் திருமணம் என்ற பகுதி சேர்க்கப்பட்டது.

காவல் துறையினர் சோதனைச்சாவடிகளில் -பதிவை சரிபார்த்த பிறகே அனுமதித்த காரணத்தால் நெடுஞ்சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் வெகு வாக குறைந்து காணப்பட்டது.

கரோனா பாதித்த பெற்றோரின் குழந்தைகளை

பாதுகாக்க மய்யம்: அமைச்சர்  தகவல்

சென்னை, மே 18 கரோனா பாதித்த பெற்றோரின், குழந்தைகளை பாதுகாப்பதற்காக தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலியில் குழந்தைகள் பாதுகாப்பு மய்யம் செயல்படத் தொடங்கியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆய்வு செய்தார். மாவட்டத்தின் ஆக்சிஜன் தேவை குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் இயங்கி வரும்தனியார் குழந்தைகள் பாதுகாப்பு மய்யத்தில் அமைச்சர் மற்றும்அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின், தொற்று பாதிக்கப்படாத குழந்தைகளை இங்கு வைத்து பராமரிக்க ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக இந்த குழந்தைகள் பாதுகாப்பு மய்யம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

கரோனா தொற்று குறையும் என்று நம்புகிறோம். இதற்காக அனைத்து துறைகளையும் முடுக்கி விட்டுள்ளோம். ஆக்சிஜன் தேவைகுறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது. தற்போது ஆலை இயங்கத் தொடங்கியுள்ளது. ஆக்சிஜனை திரவமாக்குவதற்கு உரிய குளிர்நிலையை அடைய வேண்டும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மிக விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும். மேலும், ரூர்கேலாவில் இருந்து 5 டிரக்குகளில் தூத்துக்குடிக்கு திரவ ஆக்சிஜன் வருகிறது. அங்கிருந்து அருகில் உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று, அமைச்சர் தெரிவித்தார்.

குழந்தைகள் பாதுகாப்பு மய்யத்தில் குழந்தைகளைச் சேர்க்க சைல்டு லைன் 1098, தொலைபேசி எண் 0462 255 1953, வாட்ஸ் அப் எண்99447 46791இல் தொடர்பு கொள்ளலாம். சட்டப்பேரவை உறுப்பினர் கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், மாவட்ட ஆட்சியர்விஷ்ணு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

மாநகராட்சி கார் ஆம்புலன்ஸ் சேவையால்

இரு நாட்களில் 1,250 பேர் பயனடைந்தனர்

சென்னை, மே 18 சென்னையில் ஏராளமானோர் 108 ஆம்புலன்ஸ் சேவையைப் பயன்படுத்துவதால், ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ்கள் கிடைப்பதில்லை.

இந்நிலையில், ஆக்சிஜன் வசதி தேவைப்படாத கரோனா நோயாளிகள் முதல்கட்ட பரிசோதனை மய்யத்துக்கு செல்லவும், அங்கிருந்து கரோனா சிகிச்சை மய்யங்களுக்கு செல்லவும் உதவும் வகையில், மாநகராட்சி சார்பில் ஆக்சிஜன் இல்லாத கார் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதில் தற்போது 225 கார்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றை கடந்த 15, 16ஆம் தேதிகளில் மொத்தம் 1,251 பேர் பயன்படுத்தியுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இந்த சேவையைப் பெற மாநகராட்சி மண்டல வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருவொற்றியூர் - 044 46556301, மணலி - 044 46556302, மாதவரம் - 044 46556303, தண்டையார்பேட்டை - 044 46556304, ராயபுரம் - 044 46556305, திரு.வி..நகர் - 044 46556306, அம்பத்தூர் - 044 46556307, அண்ணா நகர் - 044 46556308, தேனாம்பேட்டை - 044 46556309, கோடம்பாக்கம் - 044 46556310, வளசரவாக்கம் - 044 46556311, ஆலந்தூர் - 044 46556312, பெருங்குடி - 044 46556313, அடையாறு - 044 46556314, சோழிங்கநல்லூர் 044 46556315 ஆகிய எண்களில் கார் ஆம்புலன்ஸ் சேவையைப் பெறலாம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment