செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 5, 2021

செய்தியும், சிந்தனையும்....!

 கொல்லிகளை நிறுத்தத்தான் வேண்டும்

*           விளையாட்டுக்காரர்கள் கரோனாவால் பாதிப்பு - அய்.பி.எல். கிரிக்கெட் தொடர் தற்காலிக நிறுத்தம்.

>>           நிரந்தரமாகவே நிறுத்தலாம். உயிர்க் கொல்லி, நேரக் கொல்லியாக இந்தக் கால கட்டத்தில் இது.

சிங்கம்-டா!

*           அய்தராபாத்தில் 8 சிங்கங்களுக்கு கரோனா.    

>>           இதற்குப் பிறகாவது  எனக்கெல்லாம் கரோனா வராது என்று 'ஆம்பளை சிங்கங்கள்' மார்தட்ட வேண்டாம்.

வெற்றியின் தொடக்கம்!    

*           இங்கிலாந்தில் இருந்து 900 ஆக்சிஜன் சிலிண்டர்கள் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தன.

>>           மகிழ்ச்சி நிறைந்த தகவல்.

ஒரு சொல் இரு பொருள்

*           இன்று உலகக் கை சுத்த நாள்

>>           தனி வாழ்விலும், பொது வாழ்விலும் கை சுத்தம் மிகவும் அவசியமே!

ஆரம்பிச்சிட்டாங்க அய்யா!

*          பெட்ரோல், டீசல் விலை மிகவும் உயர்வு.

>>           தேர்தல் முடிந்து விட்டதே!

இது மூடநம்பிக்கை

*           திமுக வெற்றி - நாக்கையறுத்து நேர்த்திக் கடன்.

>>           வெற்றி கிடைத்தது கடவுளாலா?

கெட்ட பெயர்தான் மிச்சம்

*           நமச்சிவாயத்துக்கு துணை முதல் அமைச்சர் பதவி   - புதுவையில் என்.ஆர். காங்கிரசிடம் பா... வலியுறுத்தல்

>>           காங்கிரசிலேயே இருந்திருக்கலாம்.

சவாலான செய்தி

*          தமிழ்நாட்டில் ஒரு நாளில் மட்டம் 21,228 பேருக்குக் கரோனா பாதிப்பு

>>           "மக்கள் இயக்கமாக நடத்துவோம்!'' - தளபதி ஸ்டாலின் அறிவிப்பு - ஒரு மருத்துவ அணுகுமுறையே!

சர்வாதிகாரிகளின் சிந்தனைக்கு...

*           மியான்மர் வன்முறை உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கும் - சீன தூதர் எச்சரிக்கை 

>>           வரலாறு தெரிவிக்கும் வரலாறு இது தானே!

No comments:

Post a Comment