காணொலியில் கழகத் தலைவர் தளபதி ஸ்டாலின் வளர்ச்சியின் பின்னணியில் 54 ஆண்டுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 17, 2021

காணொலியில் கழகத் தலைவர் தளபதி ஸ்டாலின் வளர்ச்சியின் பின்னணியில் 54 ஆண்டுகள்

கவிஞர் கலி.பூங்குன்றன்

(நேற்றைய தொடர்ச்சி)

நீதிக்கட்சி ஆட்சி ஏற்பட்டு 101 ஆண்டுகள் ஆகிவிட்டன. நூற்றாண்டு முடிவில் - அந்த நீதிக்கட்சி - திராவிட இயக்க ஆட்சி தளபதி மு..ஸ்டாலின் தலைமையில் மலர்ந்திருக்கிறது என்ற வரலாற்றுச் செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் திராவிடர் கழகத் தலைவர்.

இந்த ஆட்சி வரும் தேர்தலில் மட்டுமல்ல - அதன் பிறகும் கூடத் தொடரப் போவது உறுதி!

அண்ணா அவர்கள் 1967இல் ஆட்சிக்குத் தலைமையேற்ற நிலையில் செய்தியாளர்கள் கேட்டார்கள்.

1957இல் தேர்தலில் நுழைந்து 10 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து விட்டீர்களே? என்று கேட்டபோது - அறிஞர் அண்ணா அவர்கள் அவருக்கே உரித்தான முறையில் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு பதில் சொன்னார்.

யார் சொன்னது? திமுக என்பது நீதிக்கட்சியின் தொடர்ச்சி! அதன் வரலாறு 1916இல் தொடங்கி - 1920இல் ஆட்சிக் கட்டிலில் ஏறியது - அதன் தொடர்ச்சி தான் தி.மு.. - நாங்கள் என்று நேர்த்தியாகப் பதில் அளித்தார்.

அப்பொழுது செய்தியாளர்கள் வேறு சில கேள்விகளையும் எழுப்பினார்கள்.

உங்கள் அமைச்சரவையில் யார் யாருக் கெல்லாம் இடம் உண்டு என்பது கேள்வி. யார் யாருக்கு எல்லாம் வாய்ப்புக் கொடுக்கப்படுமோ அவர்களுக்கெல்லாம் கிடைக்கும் என்று பதில் சொன்னார் முதல் அமைச்சர் அண்ணா.

எல்லா சமுதாயத்தினருக்கும் இடம் கிடைக் குமா என்பது அடுத்த கேள்வி. கூடுமான வரை கிடைக்கும் என்றார். கேள்வி கேட்டவர்கள் எதிர்பார்த்த பதில் அண்ணாவிடமிருந்து கிடைக்க வில்லை என்றவுடன் அதற்கு மேலும் பொறுமை யாக இருக்க முடியாத நிலையில், தங்கள் உள்ளத்தில் இருந்த ஒரு கேள்வியைக் கேட்டனர்.

பிராமணர்களுக்கு இடம் கிடைக்குமா?' என்பதுதான் அந்தக் கேள்வி.

(அண்ணாவுக்கா அவர்களின் நோக்கம் தெரியாது - ஆரிய மாயை எழுதியவர் ஆயிற்றே!)

எங்களை நம்பி அவர்கள் யாரும் வரவில் லையே' என்று பளிச்சென்று பதில் அளித்தார்.

ஆய்வாளர் எஸ்.சரஸ்வதி அவர்கள் தாம் எழுதிய ஆய்வு நூலில் (Minorities in Madras State Group Interests in Madras Politics", Impex India, Delhi 1974) சில புள்ளி விவரங் களைத் தந்துள்ளார். 1920இல் சென்னை லெஜிஸ்டிரேட்லிட் அசெம்பிளியில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 98. அதில் பார்ப்பனர்கள் 19 பேர். 1923இல் - 13 இடங்கள், 1926இல் - 18 இடங்களில் பார்ப்பனர்கள்.

அதே சட்டப்பேரவையில் 2021இல் இன்று பார்ப்பனர்களுக்கு ஒரே ஓர் இடம் கூட கிடையாது. இதுதான் இந்த சட்டசபையின் தனிப்பெரும் சிறப்பு - பெரியார் மண்ணா - திராவிட பூமியா என்று கேள்வி எழுப்பும் கூட்டத்துக்கு மக்கள் தந்த தீர்ப்பு தான் இது.

அடுத்தும் அதிமுக ஆட்சிதான் என்று சோதிடம் எல்லாம் வெளி வந்ததே - சோதிடம் என்னாச்சு? சோதிடத்துக்குத் தோல்வி என்பதை ஒப்புக் கொள்வார்களா?

முத்தமிழ் அறிஞர் கலைஞர் மறைந்தார். அவர் உடலை - அண்ணா சதுக்கத்துக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என்பது தளபதி ஸ்டாலின் அவர்களின் விருப்பம் - அதிமுக அரசு எப்படி நடந்து கொண்டது?

தளபதி ஸ்டாலின் நேரில் சென்று கேட்டுக் கொண்டும் முதல் அமைச்சரின் மனம் இரங்க வில்லையே! ஆனாலும் நீதிமன்றம் அதற்கான அனுமதியை அளித்தது.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையில், அவற்றை எல்லாம் பொருட்படுத்தவில்லை. அடக்கம், பணிவு, மக்கள் நலம் என்ற முறையில் அனைவரையும் அரவணைத்துச் செயல்பட்டு வருகிறார்.

திமுக தலைவர் என்பது அவரின் கட்சிப் பணி. அதே நேரத்தில் முதல் அமைச்சர் பணி என்பது கட்சிக் கண்ணோட்டமல்ல, மக்கள் நலன் கண் ணோட்டம். வாக்களித்த மக்களுக்கு, வாக்களித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும். வாக்கு அளித்தவர்கள், அளிக்காதோர் அனைவருக்குமே தாம் முதல் அமைச்சர் என்ற கண்ணோட்டத்தோடு செயல்பட்டு வருகிறார்.

இன்னும் சொல்லப்போனால் அதிகாரப்பூர் வமாக ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் முன்பே தன் பணிகளைத் தொடங்கி விட்டார்.

வெற்றி வெற்றி என்று பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை; அண்ணா சொன்னதுபோல் தலைசாய்ந்த நெற்கதிர் போல செயல்பட்டு வருகிறார் என்றார் தமிழர் தலைவர்.

பதாகை வேண்டாம், பூங்கொத்து வேண்டாம், பொன்னாடை வேண்டாம் என்று கூறி விட்டார். நாட்டுக்கு முன் இருக்கும் பிரச்சினை மீதே அவரின் கவனமெல்லாம்!

வெற்றி பெற்ற தளபதி - தான் யார் என்று சொல்லும்போது - திராவிட மரபைச் சார்ந்தவன் என்று பெருமையோடு அறிவித்துக் கொண்டார்.

அறிஞர் அண்ணா அவர்கள் மாநிலங்கள வைக்குச் சென்ற போது தனது கன்னிப்பேச்சில் குறிப்பிட்ட அதே வார்த்தையையே தளபதி ஸ்டாலின் அவர்களும் பதிவு செய்துள்ளார்.

புரட்சிக் கவிஞர் சொன்னாரே - நான் திராவிடன் என்று சொல்லும் போது நாவெல்லாம் தேன் தேன் தான் என்று சொன்னாரே - அதுதான் நினைவிற்கு வருகிறது.

திராவிடம் என்றால் சமத்துவம் என்று பொருள். அதனால் தான் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் நாடெங்கும் பெரியார் நினைவு சமத்துவ புரங்களை உருவாக்கினார்.

ஜாதியற்ற சமுதாயம் உருவாக்குவதற்கான திராவிட இயக்க இனப்பற்றுறுதிக்கு உருவகம் அது - பெரும்பாலான சமத்துவபுரங்களைத் துணை முதல் அமைச்சராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்தபோது திறந்து வைத்தார் தளபதி ஸ்டாலின்.

 நாடே சமத்துவபுரமாக வேண்டும் என்றார் மானமிகு கலைஞர். ஆனால் கடந்த அஇஅதிமுக ஆட்சியில் சமத்துவபுரங்கள் பராமரிக்கப்பட வில்லை - நாசப்படுத்தி விட்டார்கள்.

அவற்றையெல்லாம் செழுமைப்படுத்த வேண்டிய பொறுப்பு திமுக ஆட்சிக்கு உண்டு.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - அதனைச் செயல்படுத்தி, சமூகத்தில் ஒரு புரட்சி உருவாக்கப்பட வேண்டும்.

திமுக தலைவர் கலைஞர் மறைந்து விட்டார். வெற்றிடம் ஏற்பட்டு விட்டது என்று சொல்லுவது குறித்து கழகத் தலைவர் தம் கருத்தைப் பதிவு செய்தார்.

விஞ்ஞானப்படி வெற்றிடம் என்ற ஒன்றே கிடையாது. நாம் சொன்னோம் - இது வெற்றிடம் அல்ல கற்றிடம் - திராவிட இயக்கத்தின் மரபு வழி வந்த தளபதி கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார் - ஆட்சிப் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.

அவர் ஏதோ திடீரென்று இந்த நிலைக்கு வந்துவிடவில்லை. அவருக்குப் பின்னணியில் 54 ஆண்டு காலப் பொது வாழ்வு இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. இளைஞர் திமுகவிலிருந்து அவரின் பொதுப் பணி தொடங்கி விட்டது.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கை, வார்ப்பு, உழைப்பு, இவைதான் தளபதி மு..ஸ்டாலின் என்றார் திராவிடர் கழகத் தலைவர். ஏதோ இப்பொழுதுப் பதவிக்கு அவர் வந்த பிறகு சொன்னதாக யாரும் கருதக் கூடாது. 8 ஆண்டுகளுக்கு முன்பே ஆசிரியர் வீரமணி அவர்கள் சொன்னது என்ன?

"தளபதி மு..ஸ்டாலின் எத்தகையவர்?

தளபதி ஸ்டாலின் பிஞ்சில் பழுத்தவர் அல்லர்; விதையாகி, முளைத்து, பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகி, பழுத்து இருப்பவர். பணிதான் தனக்கு முக்கியமே தவிர, பதவியல்ல என்றே கருதி உழைத்து, திராவிடர் இயக்கத்தை இன எதிரிகளிட மிருந்து காப்பாற்ற தலைவருக்குத் தோள் கொடுத்து கடமையாற்றும் ஒரு கட்டுப்பாடு மிளிறும் சிப்பாய்! அவரை வெறுப்பவர் எவருமிலர் - எதிர்க்கட்சியினர் உட்பட!

அவருடைய கண்ணியம்மிக்க அணுகுமுறை கள், கழகத்தை பாசறையாக்கும் அவரது கண் துஞ்சாப்பணி அவரை தலைவராக அடையாளம் காணச் செய்துள்ளது!

இளைஞர் அணிப் பொறுப்பில் இருந்தார். அவரும் 60 வயதை அடையும் இளைஞர் இன்று என்பதையும் மறந்துவிட முடியாது. அவரின் முதிர்வுக்கும் அதுவும் ஓர் அடித்தளம்!

எல்லோர் எதிர்பார்ப்பையும் விஞ்சி செயலாற்றி நிரூபிப்பார் என்பதில் அய்யமில்லை" (‘விடுதலை', 8.1.2013) என்று இன்றைக்கு 8 ஆண்டுகளுக்கு முன் தமிழர் தலைவர் சொன்னது எத்தகைய தொலைநோக்கு!

இவற்றைப் பற்றி எல்லாம் விரிவாக எடுத்துச் சொன்ன தமிழர் தலைவர் அடுத்து ஒரு முக்கியமான கருத்தைப் பதிவு செய்தார்.

இப்பொழுது இருக்கும் தேர்தல் முறை என்பது பெரும் செலவுக்கு வழி வகுக்கிறது. வாக்குக்குப் பணம் என்பதெல்லாம் ஒழிக்கப்பட வேண்டும். தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருவது பற்றி ஓர் இயக்கமே நடத்தப்பட வேண்டும். மதத்தைச் சொல்லி, ஜாதியைச் சொல்லி வாக்கு சேகரிப்பதற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

சட்டம் இருக்கிறது - தேர்தல் பிரச்சாரத்தில் மதத்தைக் காட்டி வாக்கு கேட்கக் கூடாது என்று விதி முறை எல்லாம் உண்டு, ஏற்கெனவே தீர்ப்புகளும் வந்துள்ளன. மதப்பிரச்சாரம் செய்து தேர்தலில் வெற்றி பெற்றவரின் பதவி பறிக்கப் பட்டுள்ளது (பெட்டி செய்தி காண்க!).

இவற்றையெல்லாம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல தனி ஓர் இயக்கம் நடத்துவோம் என்றார்.

தேர்தல் முடிவு என்ன சொல்லுகிறது? பா... வுக்கு ஏற்பட்ட நிலை என்ன? தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 20 இடங்களில் போட்டியிட்டு வெறும் நான்கு இடங்களைத் தான் பெற முடிந்தது - அதுவும் இன்னொரு கட்சியின் தயவில்! கழகமே இல்லாத ஆட்சி அமைப்போம் என்று சொன்னவர்கள் ஒரு கழகத்தின் தயவில்தான் நான்கு இடங்களைப் பெற முடிந்தது.

கடந்த 2016 தேர்தலில் கூட்டணியின்றி 157 இடங்களில் தனியாகப் போட்டியிட்டார்களே - ஒரே ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லையே! கட்டிய பணத்தைக் கூடத் திரும்பப் பெற முடியவில்லையே!

புதுச்சேரியில் எத்தனைத் தில்லுமுல்லுகள் - குறுக்கு வழிகள் - இது தான் பா... கூறும் தார்மீகமா? பண்பாடா?

மேற்கு வங்கத்தில் என்னென்னவெல்லாம் செய்து பார்த்தனர்! கரோனாவால் மக்கள் பெரும் அளவில் பாதிப்புக்கு ஆளாகிக் கொண்டிருந்த துன்பகரமான சூழலின்போது கூட பிரதமர் 17 தடவை மேற்கு வங்கத்திற்குச் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். உள்துறை அமைச்சரோ 23 தடவை பிரச்சாரத்துக்குச் சென்றார். திரிணாமுல் காங்கிரசிலிருந்து முக்கிய தலைவர்களை எல்லாம் பா...வுக்கு இழுத்தனர்.

ஆனாலும் எண்ணெய்க்குக் கேடானதே தவிர, பிள்ளை பிழைக்கவில்லையே!

அசாமில் ஜெயிக்கவில்லையா என்பார்கள். கடந்த தேர்தலில் பா... அங்கு பெற்ற இடங்கள் என்ன? இப்பொழுது பெற்ற இடங்கள் எத்தனை?

உள்ளாட்சித் தேர்தலில் பிரதமரின் வாரணாசி மாவட்டத்திலேயே பெருந் தோல்வியை சுமந்திருக்கிறார்களே.

இனி பா...வுக்குத் தோல்வி முகம்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர்.

No comments:

Post a Comment