ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 25, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

25.5.2021

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மத்திய அரசுக்கு எதிரான காங்கிரசின் ‘toolkit’    தொடர்பாக சம்பித் பாத்ரா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பதிவிட்ட ட்வீட் களில்சந்தேகத்துக்கிடமானதுஎன்ற ரீதியில்  என ட்விட்டர்  டேக் செய்ததற்கான விளக்கம் அளிக்கு மாறு, முன்னதாக நோட்டீஸ் அனுப்பிய டில்லி காவல்துறை, இன்று குர்கான் மற்றும் டில்லியில் உள்ள லாடோ சாராய் ஆகிய இடங்களில் உள்ள ட்விட்டர் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடத்தியது. இந்த விஷயத்தில் மோடி அரசு பயந்து விட்டதாக மூத்த பத்திரிக்கையாளர் ஆகார் படேல் கருத்து தெரிவித்துள்ளார்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*மாணவிகளுக்கு செல்பேசி மூலம் பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரையடுத்து சென்னையில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை பள்ளி நிர்வாகம் காவல்துறை கைது செய்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* கரோனா தடுப்பூசி மற்றும் கருப்புப் பூஞ்சை தடுப்பு மருந்துகள் இருப்பு -  நாட்டின் தேவைக்கு ஏற்ப மத்திய அரசு. இந்த வேகத்தில் பணியாற்றினால், நாடு மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும் என டில்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசை எச்சரித்துள்ளது.

* ஆயுஸ்-64 எனும் நோய் எதிர்ப்புச் சக்தியை கரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். உள் அமைப்பான சேவா பாரதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்தியா முழுவதும் உள்ள அரசின் அமைப்புக்ளுக்கு மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளதை உடன் தடுத்திடுமாறு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தி இந்து:

* மத்திய அரசு  தமிழகத்திற்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யும் எண்ணிக்கை  ஏமாற்றமளிப்பதாக உள்ளது. ஒவ்வொரு நாளும் மாநிலத்தில் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கையுடன் ஒத்துப்போகவில்லை. ஒதுக்கீடு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

தி டெலிகிராப்:

* உலகளாவிய மருந்து நிறுவனங்களுடன் தடுப்பூசிகளுக்கு முறையான ஒப்புதல் அளிக்காமல் மாநிலங்களை நேரடியாகக் கையாள அனுமதிக்கும் நரேந்திர மோடி அரசாங்கத்தின் முடிவு கடுமை யான மற்றும் கொடூரமானது என காங்கிரஸ் கட்சி மோடி அரசைக் குற்றம் சாட்டியுள்ளது..

- குடந்தை கருணா  

No comments:

Post a Comment