அய்ந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 2021:

தமிழகத்தில் தி.மு.ஆட்சியைப் பிடிக்கிறது

 கேரளாவில் பினராயி விஜயன் - மேற்கு வங்கத்தில் மம்தா  ஆட்சி மீண்டும் அமைகிறது

சென்னை, மே 2  நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்றைக்கு வெளிவந்து கொண் டிருக்கின்றன. தமிழகத்தில் தி.மு.. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமோக வெற்றி பெற்று - தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்கவிருக்கிறார். கேரள மாநிலத்தில் பினராயி தலைமையிலான இடதுசாரி கட்சியும், மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கின்றன.

அதன் விவரம் வருமாறு:

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021-க்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (2.5.2021) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1.30 மணி நிலவரப்படி பெரும்பான்மையான தொகுதிகளில் தி.மு.. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முன்னிலை பெற்று வரும் நிலையில், தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் விரைவில் முதலமைச்சராக பதவியேற்கிறார்.

கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதால் வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவுகள் வெளியாவது நள்ளிரவைத் தாண்டி தாமதமாகும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் 76 வாக்கு எண்ணும் மய்யங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், வாக்குகளை எண்ணும் பணி இன்று (2.5.2021) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், தி.மு.. தலைமையிலான மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளனர்.

தி.மு.. கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று வரும் நிலையில்,  தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் விரைவில் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை மாநிலத்தில் ஆளும் அதிமுக, அதன் கூட்டணியான மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான அலை கிளர்ந்தெழுந்த நிலையில், மக்கள் நலனை முன்னிறுத்தி தொடர்ச்சியாக பல்வேறு போராட்டக்களங்களில் திமுக தலைமையில் இணைந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவான அலை 'சுனாமி அலை'யாக மக்களிடையே ஆதரவு பெருகியது.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நிலையில் திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் மக்களை கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சந்தித்து வந்தார். மக்களின் உரிமைப் பிரச்சினைகள், மாநில உரிமைகளை மீட்பதில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவந்தார்.

மத்தியில் ஆளும் பாஜக மாநிலங்களின் உரிமைகளை பறித்து வந்தது. வேண்டாத, விரும்பாத திட்டங்களை தமிழ்நாட்டில் திணிப்பதிலேயே முனைப்பு காட்டிவந்தது. மத்திய அரசை எதிர்த்து மக்கள் நலனை முன்னிறுத்தாமல் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக வாய்மூடி மவுனியாக இருந்தது மட்டுமல்லாமல், Ôராஜாவை விஞ்சும் ராஜ விசுவாசிÕயாக தன்னை காட்டிக்கொண்டு, எதிர்க்க வேண்டியவற்றில் எதிர்ப்பு காட்டாமல் அவற்றை நடை முறைப்படுத்துவதில் முனைப்பு காட்டியது. இதனால் மக்களிடையே அதிமுக - பாஜக கூட்டணிமீது கடும் எதிர்ப்பலை எழுந்தது.

இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பெரும் பாலான தொகுதிகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முன்னிலை வகித்துள்ளது. அதிமுக, பாஜக கூட்டணியில் அதிமுக அமைச்சர்கள் பலரும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலையில் உள்ளார். இன்று, தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும், கன்னியாகுமரி தொகுதி மக்களவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடை பெற்று வருகிறது.இதில், கன்னியாகுமரி தொகுதியில் மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் தொடர்ந்து பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை விட முன்னிலையில் இருந்து வருகிறார்.

புதுச்சேரி

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத்துக்கான 30 தொகுதிகளில் ஒரே கட்டமாக கடந்த 6.4.2021 அன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ரங்கசாமி தலை மையிலான என்.ஆர்.காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

கேரளா

கேரளாவில் 140 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஒரே கட்டமாக 6.4.2021 அன்று தேர்தல் நடைபெற்றது. கேரளாவை ஆளும் இடதுசாரி கட்சி முன்னிலையில் உள்ளது. பினராயி விஜயன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

மேற்கு வங்கம்

மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகு திகளில் 292 தொகுதி களுக்கு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு 8 கட்டங்களாக நடை பெற்றது. ஜாங்கிபூர், சாம்செர்கஞ்ச் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் இறந்து விட்டதால் அவற்றுக்கு நடைபெறவிருந்த தேர்தல், மே 16 ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது.

30 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் கடந்த மார்ச் 27ஆம் தேதியும் அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் ஒன்றாம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் 30 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 6ஆம் தேதி மூன்றாம் கட்டமாக 31 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 10 ஆம் தேதி நான்காம் கட்டமாக 33 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 17ஆம் தேதி அய்ந்தாம் கட்டமாக 45 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 22ஆம் தேதி 6ஆம் கட்டமாக 43 தொகுதி களுக்கும் ஏப்ரல் 26ஆம் தேதி 7ஆம் கட்டமாக 36 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 29ஆம்தேதி எட்டாம் கட்டமாக 35 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கையின்போது மம்தா தலைமையிலான திரிணாமுல்காங்கிரஸ் கட்சி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மீண்டும் மம்தா முதலமைச்சராகிறார்.

அசாம்

அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதி களுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாமில் ஆளும் பா... கூட்டணி முன்னிலையில் உள்ளது.


Comments