காற்றிலிருந்து குடிநீர் தரும் தொழில்நுட்பம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 1, 2021

காற்றிலிருந்து குடிநீர் தரும் தொழில்நுட்பம்

காற்றிலிருந்து குடிநீர் எடுக்க, பல தொழில் நுட்பங்கள் வரத் துவங்கியுள்ளன. அதில், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள ஏரோஜெல் தொழில்நுட்பம் மிக சுவாரஸ்யமானது.உலகிலேயே மிகவும் எடை குறைந்த பொருளான ஏரோஜெல், மிகவும் நுண்ணிய துளைகளைக் கொண்டது.

அதுமட்டுமல்ல, காற்றிலுள்ள நீராவி மூலக்கூறுகளை ஈர்க்கவும், அதேவேளையில், அவற்றை விலக்கிவிடவும் செய்யும் தன்மை கொண்டவை. இதனால், ஆவியாக உள்ள நீர் மூலக்கூறுகள், ஏரோஜெல்லினால் ஈர்க்கப்பட்டு, பிறகு திரவ நீராக மாறியதும் விலக்கப்படுகின்றன. இப்படி விலகும் நீரை ஒரு கலனில் சேமித்து வைக்கவேண்டியது தான்.

ஏரோஜெல் ஈர்த்துத் தரும் நீர், உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, மனிதர்களுக்கு குடி நீராக இருக்கும் தன்மை உடையவை என, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோ எடையுள்ள ஏரோஜெல்லை காற்றில் படும்படி வைத்தால் அது ஒருநாளைக்கு 17 லிட்டர் குடி நீரை ஈர்த்து, வடித்து தரும் திறன் கொண்டது.

ஆனால், 1 கிலோ எடையுள்ள ஏரோஜெல்லை, தட்டையாக விரித்து வைக்கவேண்டும் என்றால், அதிக இடம் தேவை என்பதுதான் குறை.

அதே சமயம், குடிநீரை காற்றிலிருந்து பிரித் தெடுக்க, மின்சாரமோ, வேறு எரிபொருளோ தேவையில்லை என்பதையும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வெயில் நேரத்தில், ஏரோஜெல் நீர் வடிகட்டி அதிக நீரை ஈர்க்கிறது என்பதால், நம்மூர் மொட்டை மாடிகளில் தண்ணீர் பந்தல் போல போட்டுக்கொள்ளலாம். நிழலுக்கு நிழல், தண்ணீருக்கு தண்ணீர்!

No comments:

Post a Comment