மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றிபெறும்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் .வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி!

ஈரோடு,ஏப்.8- .தி.மு.. தோல்வி பயத்தால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாக ஈரோட்டில் .வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகு திக்குட்பட்ட கச்சேரி சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 6.4.2021 அன்று காலை தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் .வி.கே.எஸ். இளங் கோவன் தனது குடும்பத்தினருடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் .வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மக்கள் மாற்றத்தை விரும்பு கின்றனர். தி.மு.., காங்கிரஸ் கூட் டணி 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும்.

5 தொகுதிகளில் தேர் தலை ஒத்திவைக்க வேண்டும் என்று .தி.மு.. தேர்தல் ஆணையத் திடம் புகார் தெரிவித்திருப்பது என்பது, அவர் களின் தோல்வி பயத்தை வெளிக்காட்டுகிறது. 5 தொகுதி மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்ப மாக உள்ளது. இவ்வாறு .வி.கே.எஸ். இளங் கோவன் கூறினார்.

Comments