மக்களை தாக்கும் சிஆர்பிஎஃப் வீரர்களை மதிக்கமாட்டேன்: மம்தா உறுதி

கொல்கத்தா, ஏப். 8 மேற்கு வங்கத் தில், வாக்களிக்கச் செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்களை தாக்கும் மத்திய ரிசர்வ் காவல் படை(சிஆர்பிஎஃப்) வீரர்களை மதிக்க மாட்டேன் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் மம்தா.

மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று(ஏப்ரல் 6) நடைபெற்ற 3ஆம் கட்ட வாக் குப்பதிவின்போது சிஆர்பிஎஃப் வீரர்கள் வாக்களிக்க வந்தவர் களை தாக்கியதாக புகார் எழுந் துள்ளது.

இதுகுறித்து கூச் பெஹாரில் அம்மாநில முதல்வரும் திரிண முல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பேசியதாவது, “சுதந்திர மான மற்றும் நியாயமான வாக் கெடுப்புகளை நாங்கள் விரும்பு கிறோம். பொதுமக்களை வாக் களிக்க அனுமதிக்க வேண்டும். சிஆர்பிஎஃப் வீரர்கள் பொது மக்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைவதைத் தடுக்கக்கூடாது.

உண்மையான வீரர்கள் இருக்கும் சிஆர்பிஎஃப் படையை நான் மதிக்கிறேன். ஆனால் தொல்லை செய்கிற, பெண்களைத் தாக்கும் மற்றும் மக்களைத் துன் புறுத்தும் பாஜகவின் சிஆர்பிஎஃப் அமைப்பை நான் மதிக்கமாட் டேன்" என மம்தா கூறினார்.

Comments