ஏக்நாத் கெய்க் வாட் அவர்களின் மறைவிற்கு வருந்துகிறோம்

திராவிடர்இயக்கத்தின் மீதும், தந்தை பெரியார் மீதும், நம்மிடமும் மிகுந்த  பற்றுக்கொண்டவரும், மராட்டிய மாநில மேனாள் அமைச்சரும், மக்களவை மேனாள் உறுப்பினரும், தற்போதைய மராட்டிய மாநிலகல்வி அமைச்சர்  வர்ஷா கெய்க்வாட் அவர்களின் தந்தையுமான திரு.ஏக்நாத் கெய்க்வாட் அவர்கள் 28.04.2021 அன்று மறைந்தார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம்

2004 ஆம் ஆண்டு மும்பை தாராவி பகுதியில்  பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையில் கழகத்திற்கு உறுதுணையாக இருந்து தந்தை பெரியார்சதுக்கத்தைத் திறந்து வைத்து அந்த திறப்பு விழாவில் "நானும் ஒரு திராவிடன்" என்று அறிவித்து மகிழ்ந்தவர் ஏக்நாத் கெய்க்வாட் அவர்கள்! மும்பை வாழ் தமிழர்களுக்கு உறுதுணையாக விளங்கியவர்! மறைந்த ஏக்நாத் கெய்க்வாட் அவர்கள் மும்பையில் நடைபெறும் நமது கழக நிகழ்ச்சிகளில்,  தவறாது கலந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர்.

அவர் பிரிவு அப்பகுதியில் நம் இயக்கத்திற்குப் பேரிழப்பாகும் - அவர் பிரிவால் துயருறும் அவர் தம் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும், ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை,

29.4.2021

Comments