அவசர காலத்தில் துரிதமாக செயல்பட அமீரகத்தில் கரோனா முன்களப் பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி


அபுதாபி, ஏப். 5 அமீரகத்தில் கரோனா முன்கள பணியாளர் களுக்கு திறன்களை மேம்படுத்தும் விதமாக அவசர காலங்களில் விரைந்து செயல்படுவதற்காக ஜஹிசியா சிறப்பு தன்னார்வலர் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அமீரகத்தில் ஷேக்கா பாத்திமா பிந்த் முபாரக் தன்னார்வலர் திட்டத்தின் ஒரு பகுதியாக முன்களப் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக ஜஹிசியா என்ற பெயரில் சிறப்பு தன்னார்வலர் பயிற்சித் திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி திட்டத்தில் பன்னாட்டு தரத்தில் தொற்று நோய்கள் பரவும் போது எவ்வாறு செயல்படுவது, காற்று மூலமாக பரவும் தொற்றுகள் ஏற்பட்டால் எப்படி செயலாற்றுவது, இயற்கை பேரழிவுகள், தீ மற்றும் அணுசக்தியால் ஏற்படும் விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு அனைத்து வகையான அவசர காலங்களிலும் எப்படி துரிதமாக செயல்பட்டு பணியாற்றுவது? என்பது குறித்து சிறப்புப் பயிற்சியானது வழங்கப்படுகிறது.

அமீரகத்தில் இதுபோன்ற பயிற்சிகள் 8 ஆயிரம் நிபுணர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி இந்த திட்டத்தில் இதுவரை 2 ஆயிரம் முன்களப் பணியாளர்கள் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்:

82 பயங்கரவாதிகள் பலி

கந்தகார், ஏப். 5 ஆப் கானிஸ்தானில் நடந்த வான்வழி தாக்குதலில் தலீபான் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி உள்பட 82 தீவிரவாதி கள் கொல்லப்பட்டுள்ள னர்.

ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்தின் பல பகுதிகளில் தலீபான் தீவிரவாத இயக்கத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருகின் றனர்.  இந்த நிலையில், அந்நாட்டின் தெற்கே கந்தகார் மாகாணத் தில் அர்கான்தப் மாவட்டத்தில் அரசுத் தரப்பில் வான்வழி தாக்கு தல்கள் நடத்தப்பட்டன.

இதுபற்றி ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பு துணை அதிகாரி பபத் அமன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்த வான்வழித் தாக்குதலில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தளபதி சர்காதி உள்பட 82 தீவிரவாதிகள் கொல்லப் பட்டு உள்ளனர்.  இதுதவிர, தீவிரவாதிகளின் 2 பீரங்கிகள் மற்றும் வாகனங்கள் பலவற்றையும் வீரர்கள் தாக்கி அழித்தனர்.

தலீபான் தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன என சுட்டுரையில் தெரிவித்து உள்ளார்.  எனினும், இந்த வான் வழித் தாக்குதல்கள் பற்றி தலீபான் தீவிரவாதிகள் இன்னும் எதுவும் கூறவில்லை.

Comments