வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் கோரிக்கை

சென்னை, ஏப்.17 தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மு..ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டா லின் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் சந்திரா மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆகியோருக்கு அனுப்பிய புகார் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு 6 ஆம் தேதி முடிந்தது. அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரம் ஆகியவற்றில் உள்ள பேட்டரிகளை எடுக்காமல் செயலற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விவி பேட் எந்திரங்களில் இருந்த பேட்டரிகள் வேட்பாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலை யில் அகற்றப்பட்டன.

அதன் பிறகு அவை சீலிடப்பட்டு பாதுகாப்புடன் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளின் பாதுகாப்பு அறைக்கு எடுத்து செல்லப்பட்டன. அவை பாது காப்பு அறையில் வைக்கப்பட்டு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டன. அந்த பாதுகாப்பு அறைகளின் கதவுகளும், ஜன்னல் களும் முழுவதுமாக மூடப்பட்டு கட்டைகளால் அடைக்கப்பட்டுள்ளன.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. அந்த பாதுகாப்பு அறைக்குள் யாரும் உள்ளே நுழைவதையும், அங்கிருந்து எதுவும் வெளியே போவதையும் தடுப்பதே இந்த 3 அடுக்கு பாதுகாப்பின் மிக முக்கிய நோக்கம். சி.சி.டி.வி. கேமராக்களும் அங்கு பொருத்தப்பட்டுள்ளன. அடையாள அட்டை வழங்கப்படாத அதிகாரப்பூர்வ மற்ற நபர் யாரும் அந்தப்பகுதிக்கு செல்ல முடியாது.

அந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு அதிகாரி கள், அமைச்சர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகளின் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படக் கூடாது. ஆனால் பல பாதுகாப்பு அறை வளாகங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகள் முற்றிலும் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

யாருக்கும் தெரியாத வகையில் இரவு நேரங் களில் மூடப்பட்ட வாகனங்கள் போன்ற கன்டெய் னர்கள் கமுக்கமான முறையில் வந்து செல்கின்றன. எங்கள் கட்சி பிரதிநிதிகள் கண்காணித்து போராட்டங்கள் நடத்திய பிறகு அந்த வாகனங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன.

எனவே தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாதுகாப்பு அறைகளில் வைக்கப் பட்டுள்ள வாக்குப் பதிவு எந்திரங்களை, கையாலும், மின்னணு வாயிலாகவும் எவ்வித சேதாரங்களுக்கும், ஹேக்கிங்களுக்கும் உள்ளாகி விடாமல் முழுமை யாக பாதுகாக்க வேண்டும். பாதுகாப்பு அறை மற்றும் வளாகங்களில் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கக்கூடாது.

பாதுகாப்பு அறைகளுக்கு அருகில் எந்த வகையான வாகனங்களையும் கொண்டு செல்ல அனுமதிக்கக்கூடாது. பாதுகாப்பு அறைகளைச் சுற்றிலும் உள்ள வை-பைஇணைப்புகளை உடன டியாக செயலிழக்க செய்ய வேண்டும். வெளியாட்கள் வருவதையும், அவர்கள் நடமாடுவதையும் தடுப் பதற்காக, அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் பட்டியலை வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை சென்னை தலைமைச் செயல கத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் தி.மு..வின் மூத்த நிர்வாகிகள் ஆர்.எஸ்.பாரதி, .இராசா, பொன்முடி ஆகியோர் வழங் கினர்.


Comments