'மன்கி பாத்' உரையை மக்கள் விரும்புவதில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 26, 2021

'மன்கி பாத்' உரையை மக்கள் விரும்புவதில்லை

மோடிமீது மம்தா சாடல்

கொல்கத்தா,ஏப்.26- மனதின் குரல் (மன் கீ பாத்) எனும் தலைப்பிலான பிரதமர் மோடியின் வானொலி உரையை  நிகழ்ச்சியை மக்கள் விரும்புவதில்லை என மேற்கு வங்காள முதல்அமைச்சர் மம்தா   சாடியுள்ளார்.

முர்ஷிதாபாத் மாவட்ட திரி ணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும்போது இது தொடர்பாக அவர் கூறிய தாவது:-

உங்கள் (பிரதமர்) மன் கீ பாத் உரையை யார் விரும்புகிறார்கள்? கரோனா குறித்த உரைகளைத்தான் மக்கள் தற்போது விரும்புகின்றனர். 1000 பேர் கொண்ட ஒரு கூட்டத்தில் ஒருவருக்கு தொற்று இருந்தால் கூட, மற்ற அனைவரும் பாதிக்கப்படக்கூடும்.

ஆனால் டில்லி, உத்த ரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இருந்து 2 லட்சம் மத்திய படைகள் மேற்கு வங்கா ளத்துக்கு வந்துள்ளனர். இதில் ஏராளமானோர் தங்களை அறியாமலேயே வைரசை சுமந்து வந்தி ருக்கக்கூடும். ஏனெனில் யாருக்கும் தேர்தல் ஆணையம் சார்பில் வைரஸ் பரிசோதனை செய்யப் படவில்லை. இதைப்போல வெளி மாநிலங்களில் இருந்து அமைச் சர்கள் உள்பட சுமார் 1 லட்சம் பா...வினர் தேர்தலுக்காக மேற்கு வங்காளம் வந்துள்ளனர். எதிர்காலத்தில் தேர்தல்களை மிகவும் ஜனநாயக முறையில் நடத் துவதற்காக உச்சநீதி மன்றத்தை அணுகுவோம். இது தொடர்பாக ஏற்கெனவே நான் மூத்த வழக் குரைஞர்களுடன் பேசியிருக் கிறேன்.

இவ்வாறு மம்தா கூறினார்.

No comments:

Post a Comment