மத்திய அரசின் நிர்வாகம் தோல்வி : ராகுல் சாடல்

புதுடில்லி, ஏப்.26 நாட்டின் நிர்வாக முறை (சிஸ்டம்) தோல்வி அடைந்துவிட்ட தென காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பி னருமான ராகுல் காந்தி மத்திய அரசை  சாடி யுள்ளார். நாட்டில் கரோனா 2 ஆவது அலை தீவிரமாக இருந்து வருகிறது. நாள்தோறும் 3.50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டில்லி, மும்பை, அகமதாபாத், லக்னோ உள் ளிட்ட பல்வேறு நகரங்களில் பாதிப்பு தீவிர மடைந்து வருகிறது.

 இந்நிலையில், ஞாயிறன்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடிபேசுகையில், “கரோனா முதல்அலையை வெற்றிகரமாக கையாண்டு நம்பிக்கையுடன் இருந்த நிலையில், 2 ஆம் அலை நம் தேசத்தை உலுக்கி எடுத்து விட்டது. இருப்பினும் இந்த சிக்கலில் இருந்து விரைவில் மீள்வோம்” எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து காங் கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் மத்திய அரசை விமர்சித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் “சிஸ் டம் தோல்வி அடைந்துவிட்டது. இந்நேரம் மக்களின் நலனைப் பற்றிபேசுவதுதான் முக்கிய மானது. இந்த சிக்கலான நேரத் தில் தேசத்துக்கு பொறுப்புள்ள குடிமகன்கள் அவசியம். காங் கிரஸ் கட்சியில் உள்ள என்னு டைய நண்பர்களிடம் நான் கேட்பது என்னவென்றால், உங்களின் அரசியல் பணியை ஒதுக்கி வைத்து, இந்திய மக் களுக்கு உதவுங்கள், உதவிக்காக தவிக்கும் மக்களுக்கு உதவுங்கள். இதுதான் காங்கிரஸ் குடும்பத் தின் தர்மம்.” எனத் தெரிவித் துள்ளார். 

முன்னதாக மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் பங் கேற்கும் முடிவில் இருந்த ராகுல் காந்தி, நாட்டில் அதிக ரித்துவரும் கரோனா பரவல் சூழலைப் பார்த்து, தனது பிரச் சாரப் பயணங்கள் அனைத்தை யும் ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments